பண மழையில் மகாராஜா! விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி.. கெத்து காட்டும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன்!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் எல்லோராலும் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய் சேதுபதி பெயர் டாப் லிஸ்ட்டில் இருக்கும். சினிமாவில் நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து, சைடு கேரக்ட்டர்களில் நடித்து, கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

Maharaja Movie Vijay Sethupathi 50

அதன் பின்னர் தனக்கு கிடைத்த நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருந்த விஜய் சேதுபதியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. கதாநாயகன் மட்டும் இல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாப்பத்திரங்கள், கௌரவ வேடங்கள் என தொட்ட இடத்தில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்து வந்தார் விஜய் சேதுபதி.

Maharaja Movie Vijay Sethupathi 50

சமீபத்தில் இந்தி சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ள விஜய் சேதுபதி அங்கும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகின்றார். விஜய் சேதுபதி தொடர்ந்து தனது படங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதனால் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருகின்றார்.

Maharaja Movie Vijay Sethupathi 50

விஜய் சேதுபதி 50: இந்நிலையில் இவரது 50வது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், திரைப் பிரபலங்கள் பலர் இந்த படத்தைப் பார்த்த பின்னர் நல்ல விமர்சனங்களையே கொடுத்தனர். மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வசூல் வேட்டை: மகாராஜா படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவரும் மகாராஜா படத்தின் வெற்றிக் கொண்ட்டாட்டத்தை படக்குழுவினர் நேற்று அதாவது ஜூன் 19ஆம் தேதி கொண்டாடினர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. படம் இதுவரை ரூபாய் 55.80 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த வசூலை படம் வெளியாகி முதல் 6 நாட்களில் மகாராஜா வசூல் செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு வெளியான படங்களில் 55 கோடிகளை விரைவில் வசூல் செய்த படமாக மகாராஜா மாறியுள்ளது. இந்த தகவலையும் படக்குழு தெரிவித்துள்ளது.

Maharaja Movie Vijay Sethupathi 50

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X