Vijay Sethupathi: மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி -மணிகண்டன் காம்போ.. இந்த முறை வெப் சீரிஸிற்காக கூட்டணி
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் வெளியானது ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்கள்.
இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தற்போது இணைந்துள்ளது. இந்த முறை இவர்கள் இணைந்துள்ளது வெப் தொடருக்காக.
இவர்கள் இருவரும் இணைந்து புதிய வெப் தொடரை உருவாக்கி வருகின்றனர். இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருபவர். கோலிவுட்டின் மிகவும் பிசியான ஹீரோவாக, வில்லனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக உள்ளவர். அடுத்தடுத்து கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள விஜய் சேதுபதி, தொடர்ந்து வில்லன் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த மொழிகளில் நடிப்பு: தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் வில்லனாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து நல்ல கதைக்களங்களில் சிறப்பான இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்துவரும் விஜய் சேதுபதி, முன்னதாக இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் விமர்சனரீதியாக மிகப்பெரிய ரீச்சை ரசிகர்களிடையே பெற்றது.
மீண்டும் மணிகண்டனுடன் கூட்டணி: இந்நிலையில் இந்த வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் தற்போது படத்திற்காக இல்லாமல் வெப் தொடருக்காக இணைந்துள்ளனர். ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இந்தத் தொடரின் சூட்டிங் 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும் இந்த தொடருக்கு காத்தான் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தற்போது டீம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் சோசியல் மெசேஜை கொடுத்து வருகிறார் மணிகண்டன்.
சமூக அக்கறை: அந்த வகையில் இந்த வெப்தொடரும் சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப, இந்தப் படத்தின் டைட்டிலும் காத்தான் என்று அமைந்துள்ள நிலையில் யாரை, எந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி காக்கிறார் என்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெப் தொடரை முதல் காப்பி அடிப்படையில் மணிகண்டன் எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் மணிகண்டன்: காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மணிகண்டன். இந்தப்படத்தை தொடாந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி என அவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றவையாக அமைந்துள்ளன. மேலும் வணிகரீதியாகவும் இந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள வெப் தொடரும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











