‘துருவன்‘ அட்டகாசமான பெயரா இருக்கே…ரசிகரின் குழந்தைக்கு பெயர்சூட்டிய விஜய்சேதுபதி !
சென்னை : மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு துருவன் என பெயர் வைத்துள்ளார்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர்களை எப்போதும் அன்போடும் அணுகும் குணம் கொண்டவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த வகையில் நான் தனது ரசிகரின் குழந்தைக்கும் இவர் பெயர் சூட்டியுள்ளார்.
அவர் குழந்தையின் தலையில் முத்தமிட்டு கொஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனக்கென தனிஇடம்
எந்தவொரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது திறமை மூலம் கோலிவுட் திரையுலகில் தனக்கென இடம்பிடித்து முன்னேறியவர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என ஒவ்வொரு படங்களிலும் தனிமுத்திரை பதித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இயல்பான பேச்சு
எதார்த்தமானா நடிப்பு, இயல்பான பேச்சு, ஹீரோ என்றாலும், வில்லன் என்றாரும் தனக்குரிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடிப்பது இவருடைய ஸ்டைல். இவரது நடிப்புக்கு மேலும் மகுடன் சூட்டும் விதமாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை தமிழக அரசு அறிவித்து இவரை மேலும் கௌரவப்படுத்தி உள்ளது.

இந்தியில் மும்பைக்கர்
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஓரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளன. மேலும், மாநகரம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது இதில் விஜய்சேதுபதி விஜய்சேதுபதி நடித்துவருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி வைரலானது.

துருவன் என பெயர் வைத்தார்
இந்நிலையில் தருமபுரி மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் சிலம்புவின் ஆண் குழந்தைக்கு துருவன் என பெயர் சூட்டியுள்ளார். அதன் புகைப்படங்களை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி தலையில் முத்தமிடும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











