மிஷ்கினை சைக்கோன்னு நினைச்சிட்டேன்.. ஆனா காஸ்ட்லி வாட்சை பரிசாக கொடுத்தார்.. விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கினுடன் இணைந்து பிசாசு 2 படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தான் நடித்துள்ளதாகவும் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கில் இந்த படத்தை தான் முடித்துக் கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மிஷ்கினை தான் சைக்கோவாகவே பார்த்ததால் அவரது சைக்கோ திரைப்படத்தை நீண்ட நாட்களாக தான் பார்க்காமல் இருந்ததாகவும் தொடர்ந்து சைக்கோ படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் மிஷ்கின் குறித்த தன்னுடைய பார்வை மாறியதாகவும் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்துள்ளார். நேரடியாகவே மிஷ்கினை சைக்கோவாக தான் நினைத்துக் கொண்டது குறித்து அவரிடம் கூறி மன்னிப்பு கேட்டதாகவும் விஜய் சேதுபதி மேலும் கூறியுள்ளார்.

Vijay sethupathi Maharaja movie Mysskin Train movie tamil cinema

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. கடந்த இரு தினங்களில் மிகப்பெரிய வசூலை இந்தப் படம் கொடுத்துள்ளது. தொடர்ந்து மிகவும் வெற்றிகரமாக இந்த படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதனின் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி உள்ள சூழலில் மிக அழுத்தமான கேரக்டரில் விஜய் சேதுபதி இந்த படத்தில் வெகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற கேரக்டர்கள் விஜய் சேதுபதிக்கு எப்போதுமே அல்வா சாப்பிடுவது போல என்பதால் இந்த கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார்.

மகாராஜா படம்: மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இப்போதுதான் தன்னுடைய 25வது படமான சீதக்காதியில் நடித்தது போல உள்ளது என்றும் அதற்குள் 50 படங்களை நிறைவு செய்து விட்டதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மகாராஜா படத்திற்காக முன்னதாக அதிகமான பேட்டிகளை கொடுத்து வந்தார் விஜய் சேதுபதி. அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இயக்குனர் மிஷ்கினுடன் பழகும் சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் தனக்காக ட்ரெயின் படத்தை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிசாசு 2 பட சான்ஸ்: ஆனால் அந்தப் படத்தை அவர் எழுதி முடிப்பதுவரை தன்னால் காத்திருக்க முடியாது என்று கூறி பிசாசு 2 படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தான் அவருடைய இயக்கத்தில் இணைந்து நடித்ததாகவும் விஜய் சேதுபதி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் மூன்று காட்சிகளில் மட்டுமே தான் நடித்துள்ளதாகவும் இரண்டு நாட்களில் நடித்து கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக தெரிகிறது. இதனிடையே தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக மிஷ்கினின் சைக்கோ படத்தை பார்க்காமல் நீண்ட நாட்கள் தான் தள்ளிப் போட்டதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.

மிஷ்கினை சைக்கோவாக நினைத்தேன்: மிஷ்கினை தான் சைக்கோவாக நினைத்ததாகவும் அதனால் தான் அவரது சைக்கோ படத்தை நீண்ட நாட்களாக பார்க்கவில்லை என்றும் இது குறித்து அவரை பார்த்தபோது தான் நேரிடையாகவே கூறிவிட்டதாகவும் விஜய் சேதுபதி தன்னுடைய பேட்டியில் மேலும் குறிப்பிட்டார். ஆனால் சைக்கோ படத்தை பார்த்தவுடன் அதன் கதைகளத்தால் தான் மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டதாகவும் அந்த படம் குறித்து பாராட்டு தெரிவிப்பதற்காக மிஷ்கினை நேரில் சந்தித்து தொடர்ந்து எட்டு மணி நேரம் படம் குறித்து தான் புரிந்து கொண்டது சரியா என்பதாக தங்களுடைய உரையாடல் நிகழ்ந்ததாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

காஸ்ட்லி வாட்சி பரிசு: இந்த உரையாடலை தொடர்ந்து தன் கையில் போட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காஸ்ட்லி வாட்சை கழற்றி மிஷ்கின் தனக்கு பரிசாக கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தனது சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒரு படத்தை தான் பார்த்ததற்காக தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வாட்ச் பரிசாக கிடைத்ததாகவும் அவர் தன்னை தானே பாராட்டிக்கொண்டார். தொடர்ந்து ட்ரெயின் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் சில காட்சிகளை தான் பார்த்து மிகவும் இம்ப்ரஸ் ஆனதாகவும் தன்னுடைய பேட்டியின் விஜய் சேதுபதி மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X