Vijay Sethupathi: தயாரிப்பு குறித்த அறிவில்லை.. முதல்பட தயாரிப்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளராகவும் பாடகராகவும் நடிகராகவும் பன்முக திறமையுடன் கோலிவுட்டில் சிறப்பான அளவில் ரசிகர்களை கவர்ந்து நடித்து வருகிறார். நடிகராக அவரது 50வது படமான மகாராஜா நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தயாரிப்பாளராகவும் ஆரஞ்சு மிட்டாய், லாபம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி.

தயாரிப்பாளராக இந்த படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுக்காத நிலையில் ஒரு படத்தை எப்படி தயாரிப்பது என்ற அறிவில்லாமல் தான் படங்களை தயாரித்ததாக அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். மகாராஜா படத்தின் ரிலீசையொட்டி ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை மேற்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.

Vijay sethupathi Maharaja movie tamil cinema

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி பீட்சா படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். முன்னதாக சில படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தாலும் அதிகமான கவனத்தை பீட்சா படமே இவருக்கு பெற்று தந்தது. முதல் படமே விஜய் சேதுபதிக்கு ஹாரர் படமாக உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த படம் விஜய் சேதுபதிக்கு சிறப்பாக கை கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படைப்புகளில் வெற்றிப்பட இயக்குனர்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நாயகனாக தன்னை நிலை நிறுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.

50வது படம்: குறுகிய காலத்திலேயே இவர் தனது 50வது படமான மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். நாளைய தினம் இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்தடுத்து ப்ரோமோஷன்களில் விஜய் சேதுபதி ஈடுபட்டுள்ளார். முன்னதாக உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவிடம் இவரது மகாராஜா படம் குறித்த பிரமோஷன்கள் வெளியிடப்பட்டன இந்நிலையில் இன்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் பல பேட்டிகளை படத்தின் ப்ரோமோஷன்களுக்காக கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி.

தயாரிப்பாளர் விஜய் சேதுபதி: தயாரிப்பாளராகவும் ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை, லாபம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த படங்கள் உருவான நிலையில் தயாரிப்பாளராக விஜய் சேதுபதிக்கு இந்த படங்கள் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் ஒரு படத்தை எப்படி தயாரிப்பது, தயாரிப்பாளராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவில்லாமல் தன்னுடைய படங்களை தான் தயாரித்ததாகவும் ஒரு படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்துவிட்டு அடுத்த படத்தை தான் தயாரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைக்கொடுத்த முகிழ் படம்: தற்போது லாபம் படத்தில் தான் தொலைத்த பணத்தை திரும்பி செலுத்தி வருவதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார் இந்த கடனை அடைத்தவுடன் அடுத்த படத்தை தயாரிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய மகளுடன் இணைந்து தான் நடித்திருந்த முகிழ் படம் தயாரிப்பாளராக தனக்கு சிறப்பாக அமைந்ததாகவும் லாபம் சம்பாதித்து கொடுத்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி தயாரிப்பாளராக அவர் வெற்றி பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. அடுத்ததாக மகாராஜா படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X