வாழ்க்கை ஒரு கம்னாட்டி.. கமல் கொடுத்த அன்பு முத்தம் குறித்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி ஏராளமான ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
மகாராஜா படங்களின் அடுத்தடுத்த ட்ரெயிலர்கள் வெளியான நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படம் குறித்து, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் விஜய் சேதுபதி அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி குறுகிய காலத்திலேயே 50 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது 50வது படமான மகாராஜா படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் அபிராமி, நட்ராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட நடிகர்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளனர். திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர் வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குரங்கு பொம்மை என்ற படத்தை முன்னதாக இயக்கி ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மகாராஜா படம்: கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான மகாராஜா படத்தின் ட்ரெயிலரில் லட்சுமியை தேடும் விஜய் சேதுபதி கவனத்தை ஈர்த்திருந்தார். கடைசிவரை லட்சுமி யார் என்பதை இந்த ட்ரெய்லரில் படக் குழுவினர் வெளிப்படுத்தாமல் மாஸ் காட்டியிருந்தனர். இந்நிலையில் நாளைய தினம் வெளியாகும் மகாராஜா படத்தில் லட்சுமி யார் என்பது குறித்து தெரியவரும். தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறாமல் கேரக்டர் ஆர்டிஸ்ட், வில்லன் என அடுத்தடுத்த வித்தியாசமான கேரக்டர்களில் இவர் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: அந்த வகையில் விஜய், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். குறிப்பாக விக்ரம் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து வில்லனாக அதகளம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது மகாராஜா படத்திற்காக அடுத்தடுத்த ப்ரமோஷன்களை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. அவ்வாறு ஒரு பேட்டியில், முன்னதாக நடிகர் கமல்ஹாசன் விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுப்பதாக உள்ள புகைப்படத்தை காட்டி விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்த வாழ்க்கை ஒரு கம்மனாட்டி என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
கமல் படத்தில் ரிஜெக்ட்: முன்னதாக நடிகர் கமல்ஹாசனின் நம்மவர் படத்தில் கல்லூரி மாணவராக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி தான் சென்றதாகவும் ஆனால் தன்னுடன் வந்த நண்பர்கள் செலக்ட் ஆன நிலையில் தான் செலக்ட் ஆகாததாகவும் தன்னுடைய முகம் முதிர்ச்சியாக இல்லை என்று கூறி தன்னை ரிஜெக்ட் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அப்படி அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் தற்போது தன்னுடைய நிலை மாறி இருக்கும் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அவருடைய படத்தில் சிறிய கேரக்டரில் நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தான் தற்போது அவருடைய படத்திலேயே மிகப்பெரிய சம்பளத்திற்கு தான் நடித்ததாகவும் அவரிடம் முத்தத்தை பரிசாக பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
கமல் கொடுத்த முத்தம்: கமல் குறித்து தான் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவரிடம் அவ்வளவு சினிமா குறித்த அறிவு இருப்பதாகவும் கூறியுள்ளார். ஷாட்டுக்கு இடையில் பேசும்போதும், தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கடத்தும் நோக்கத்திலேயே அவர் பேசுவார் என்றும் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்துள்ளார். அவருடன் நெருங்கிப் பழகும்போதுதான் அவரது அருமை தெரிவதாகவும் கூறியுள்ளார். நம்மவர் படத்தில் நடிக்க வந்த பையனுக்கு இந்த முத்தத்தின் அருமை தெரியாது என்றும் ஆனால் சினிமாவை ஓரளவிற்கு படித்துள்ள இந்த விஜய் சேதுபதிக்கு இந்த முத்தத்தின் அருமை தெரியும் என்றும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











