Vijay sethupathi: வில்லனாக நடிக்க லோகேஷ் என்னிடம் கேட்கலை.. என்ன விஜய் சேதுபதி இப்படி சொல்லிருக்காரு

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2 படம் ரிலீஸாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான மகாராஜா படம் அவரது 50வது படமாக ரிலீசானது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக தற்போது விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் உள்ளிட்ட படக் குழுவினர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். விடுதலை 2 படம் குறித்தும் தன்னுடைய முந்தைய படங்கள் குறித்தும் பல விஷயங்களை விஜய் சேதுபதி பகிர்ந்து வருகிறார்.

vijay vijay sethupathi master movie

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். எப்படி மொழி பேதம் பார்க்காமல் அடுத்தடுத்த மொழிகளில் நடித்து வருகிறாரோ அதேபோல ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஹீரோவாகவும் வில்லனாகவும் கேரக்டர் ரோல்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் தான் வில்லனாக இவரது கேரக்டர் அதிரடியாக துவங்கியது. முன்னதாகவும் வில்லனாக நடித்திருந்தாலும் மாஸ்டர் படத்தில் மிரட்டலான வில்லினிசத்தை விஜய் சேதுபதி பதிவு செய்திருந்தார்.

விடுதலை 2 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விக்ரம், ஜவான் படங்களிலும் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டினார். இந்நிலையில் இனிமேல் நோ வில்லன் என்று முடிவெடுத்துள்ளார் விஜய் சேதுபதி. சில காலங்களுக்கு ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்றும் அவர் தீர்மானித்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சூரி, கென் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பிரமோஷன்களில் விஜய் சேதுபதி: விடுதலை 2 படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது விடுதலை 2 படத்தின் ப்ரொமோஷனுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் படம் குறித்தும் தன்னுடைய மற்ற படங்கள் குறித்தும் தன்னுடைய கேரியர் குறித்தும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க தன்னிடம் லோகேஷ் கனகராஜ் கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னை வில்லனாக நடிக்க வைக்கும் ஐடியா இருந்த போதிலும் தன்னிடம் கேட்காமல் லோகேஷ் தயக்கம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு வில்லன்: இது குறித்து மற்றொரு நபர் மூலம் தெரிந்து கொண்ட தான், தானாக சென்று லோகேஷ் கனகராஜிடம் கால் செய்து இது குறித்து கேட்டதாகவும் தொடர்ந்து தன் வீட்டுக்கு வந்த லோகேஷ் கனகராஜ், 10 நிமிடங்களில் கதையை கூறியதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். எனக்கு வில்லனாக நடிக்க ஆசை இருந்ததாகவும் தயக்கத்துடனேயே இருப்பதை காட்டிலும் அதை எக்ஸ்பீரியன்ஸ் செய்துவிட வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் விஜய் சேதுபதி மேலும் கூறியுள்ளார். அதனால்தான் இந்த கேரக்டரை ஏற்று நடித்ததாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார். வில்லனாக நடிக்க தனக்கு தயக்கம் இல்லை என்றும் தயக்கம் இருந்திருந்தால் நடிக்கவே வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X