பாடங்களை கத்துக்கிட்டிருக்கேன்.. ராம்சரணுடன் நடிக்க மறுத்தது குறித்து பேசிய விஜய் சேதுபதி!
ஐதராபாத்: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டில் விடுதலை படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் விடுதலை 2 படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களுக்காக படக்குழுவினர் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஐதராபாத்திலும் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டில் இதன் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. வசூலிலும் மிகச் சிறப்பாக இந்த படம் அமைந்திருந்தது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள விடுதலை 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பிரமோஷன்: வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ள நிலையில் அவரது இளவயது லுக்கிற்காக படக்குழுவினர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இதற்காக விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் அமெரிக்கா சென்றிருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்கள் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்தனர். இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் படத்தின் ப்ரோமோஷன்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ராம்சரண் படம் குறித்து விஜய் சேதுபதி ஓபன்: ஐதராபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்ற நிலையில், அவரிடம் அடுத்தடுத்த கேள்விகள் கேட்கப்பட்டன.. அதில் அவர் ஏன் ராம்சரணுடன் இணையவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தனக்கு செட் ஆகவில்லை என்று பதில் அளித்துள்ளார். மேலும் சில பாடங்களை தான் கற்றுக் கொண்டுள்ளதாகவும் படத்தின் கதைக்களம் சிறப்பாக அமைந்தால் தன்னுடைய கேரக்டர் சிறப்பாக அமையாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அந்தப் படத்தில் நடிக்க நேரம் ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்சி16 படம்: ராம்சரண் -புஜ்ஜி பாபு கூட்டணியில் உருவாகிவரும் அவரது ஆர்சி16 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இணையவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகியோருடன் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தொடர்ந்து வில்லனாக நடிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே ஆர்சி16 படத்தில் வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதை தற்போது விஜய் சேதுபதியும் தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்தடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் ட்ரெயின், பிசாசு 2, ஏஸ் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் ரிலீசாக உள்ளன.


Click it and Unblock the Notifications











