Vijay sethupathi: சூரியை மாஸாக காட்ட வெற்றிமாறன் போட்ட பிளான்.. விஜய் சேதுபதி சொன்னத பாருங்க!

சென்னை: விடுதலை 2 படம் நடிகர்கள் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கென் என முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் 20ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்னும் சில தினங்களில் அடுத்த பாகம் வெளியாகவுள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுததடுத்த பிரமோஷன்களில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். படம் குறித்தும் இயக்குநர் வெற்றிமாறன் குறித்தும் அவர்கள் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகின்றனர்.

vijay sethupathi viduthalai 2 movie soori


விடுதலை 2 படம்: நடிகர் சூரி பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது விடுதலை படம். வெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீசான இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் 20ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சென்னையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்திருந்தார்.

விடுதலை 2 பிரமோஷன்கள்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கென் என படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் இந்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை படம், விடுதலை 2 படம் இவற்றின் சுவாரசியங்களை மட்டுமில்லாமல் இயக்குநர் வெற்றிமாறன் குறித்தும் பல விஷயங்களை இவர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் சேதுபதி: விடுதலை படத்தில் முதலில் தான் இடைவேளையின் போது கைதாக இருந்ததாகவும் ஆனால் படத்தை மேலும் சிறப்பாக கொடுப்பதற்காக அந்த காட்சியை கிளைமாக்ஸிற்கு வெற்றிமாறன் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க சூரி செயல்பட்டு வந்ததால் அவரது முதல் படத்தை மாஸாக காட்ட வேண்டும் என்பதில் வெற்றிமாறன் மிகவும் உறுதியாக இருந்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இப்படித்தான் படத்தில் சூரி பல்டியடிக்கும் காட்சி முதலில் சாதாரணமாக எடுக்கப்பட்டதாகவும் பின்பு அதை மாஸாக்கியதாகவும் கூறியுள்ளார்.

சூரி கேரக்டரை சிறப்பாக்கிய வெற்றிமாறன்: காமெடியனாக இருந்து ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சூரிக்காக பல விஷயங்களை வெற்றிமாறன் பார்த்து பார்த்துசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்தால்தான் ரசிகர்கள் மனதில் சூரி நாயகனாக போய் அமர்வார் என்று வெற்றிமாறன் கூறியதாகவும் விஜய் சேதுபதி ரகசியம் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X