Vijay sethupathi: அரசியல்லல்ல என்ன ஆசை.. வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.. யாரை சொல்றாரு?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது. இந்நிலையில் படம் கடந்த மூன்று நாட்களில் சர்வதேச அளவில் 30 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குகுழுவினர் அடுத்தடுத்து ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. அப்போது இவர்கள் அடுத்தடுத்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு கொடுத்த பேட்டியில் விஜய் சேதுபதி அரசியல் ஆசை குறித்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் பெற்று வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியான நிலையில் அதிரடியாக ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள விடுதலை 2 படம் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவரது அழகான காதல், அதிரடி செயல்கள் உள்ளிட்டவை இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலை 2 படம்: ஆயினும் முதல் பாகம் அளவிற்கு இந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்ற ஒரு விமர்சனமும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து இந்த படத்தின் பிரமோஷன்களுக்காக செயல்பட்டு வந்த நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். கேஎஸ் ரவிக்குமாருடன் படக்குழுவினர் இந்த பேட்டியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவரது அரசியல் அறிவிப்பு தனக்கு அதிர்ச்சியை கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு ஆசை தேவையில்லை: இதையடுத்து விஜய் சேதுபதி அரசியலுக்கு வருவாரா என்று கேஎஸ் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, தனக்கு அந்த அளவிற்கு அறிவு இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அரசியல் அறிவு இருந்தால்தான் அதில் நுழைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அரசியல் ஆசை என்று கூறப்படுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அரசியலுக்கு தேவை ஆசை இல்லை அரசியல் என்பது பொறுப்புடன் செயல்படுவது என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அவ்வளவு பொறுப்பு தன்னிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி அதிரடி: இதனிடையே பக்கத்தில் இருந்த சூரியிடம் அரசியலுக்கு வருவாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர் தனக்கு தெரியவில்லை என்று பதில் அளித்ததையும் பார்க்க முடிந்தது. தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை அடுத்தடுத்து வெளிப்படையாகவும் அதிரடியாகவும் பேசி வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் அரசியலுக்கு ஆசை தேவையில்லை என்றும் பொறுப்பு தான் தேவை என்றும் அரசியல் அறிவும் முக்கியம் என்றும் கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











