Vijay sethupathi: டோலிவுட்டில் களைகட்டாத கோட், கங்குவா படங்கள்.. விஜய் சேதுபதி பதில் என்ன தெரியுமா?

ஐதராபாத்: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த விடுதலை 2 பட பிரமோஷன்களுக்காக பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் பிரமோஷன்களை மேற்கொண்ட விடுதலை 2 டீம், தற்போது ஐதராபாத்தில் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பு, பேட்டிகளை கொடுத்து வருகிறது.

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது.

vijay sethupathi goat movie kanguva movie

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்துவதும் நிலையில் அவரது 50வது படமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய சக்சசை அவருக்கு கொடுத்துள்ளத. இந்த படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் சீனாவில் படம் அந்த மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது இந்நிலையில் அடுத்ததாக ஜப்பான் மொழியிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படம் சர்வதேச அளவில் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

விடுதலை 2 பட பிரமோஷன்கள்: இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சூரி, மஞ்சு வாரியர், கென் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் படத்திற்கு கொடுத்துள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பு, பேட்டிகள் உள்ளிட்டவற்றை கொடுத்து வந்த படக்குழுவினர் தற்போது ஹைதராபாத்தில் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதியிடம் கேள்வி: அந்த வகையில் சூரி உள்ளிட்டவர்களுடன் இணைந்தும் தனித்தும் விஜய் சேதுபதி பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதன்போது அவரிடம் பல கேள்விகளை ஆங்கர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் டோலிவுட்டில் முன்னதாக வெளியான விஜய்யின் கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா படங்கள் சரியான வரவேற்பை பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி முதலில் தான் விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்துள்ளதாகவும் தான் எதற்காக இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

படம் குறித்த விமர்சனங்கள்: ஆனாலும் தொடர்ந்து பேசிய அவர் யாராக இருந்தாலும் மக்கள் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய படமாக இருந்தாலும் மக்கள் தன்னை கலாய்த்தாலும் அதை தான் ஏற்கத்தான் வேண்டும் என்றும் கூறியுள்ளார். எந்த தொழிலை தொடங்கினாலும் வெற்றியை எதிர்பார்த்தே அனைவரும் அதை துவங்குவதாகவும் அதேபோலத்தான் சிறிய படமாக இருந்தாலும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் வெற்றியை எதிர்பார்த்தே அனைவரும் படத்தை எடுப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். மற்றவர்களின் விமர்சனங்களையும் நாம் ஏற்கத்தான் வேண்டும் என்றும் அதற்காகவே பிரீமியர்ஷோக்களும் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X