விஜய் சேதுபதி சந்திக்க விரும்பும் நபர்.. என்ன இப்படி சொல்லியிருக்காரு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் வெப் தொடர்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் பார்ட் ஒன் வரும் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

சூரியுடன் விடுதலை படத்தில் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் இந்தியிலும் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். நிற்கக்கூட நேரமில்லாமல் நடித்துவரும் விஜய் சேதுபதியின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி வெப் தொடர், அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

விடுதலை படம்

விடுதலை படம்

அடுத்ததாக தமிழில் இவரது நடிப்பில் வரும் மார்ச் 31ம் தேதி விடுதலை படம் வெளியாகவுள்ளது. நடிகர் சூரியும் இந்தப் படம் போலீஸ் கான்ஸ்டபிளாக லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அசுரன் படத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து வெற்றிமாறனின் விடுதலை படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியாகியுள்ளது.

சிறப்பான வாத்தியார்

சிறப்பான வாத்தியார்

முன்னதாக விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் தமிழில் வெளியான நிலையில் தற்போது விடுதலை படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் நடிக்கத்தான் முதலில் அவர் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து அந்தக் கேரக்டர் டெவலப் ஆகி, தற்போது படமும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். படம் குறித்தும் பொதுவாகவும் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி சந்திக்க விரும்பும் நபர்

விஜய் சேதுபதி சந்திக்க விரும்பும் நபர்

இதனிடையே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதி சந்திக்க விரும்பும் நபர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, தனக்குள் இருக்கும் தன்னை தான் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தான் யார் என்று தனக்கே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். எதிரில் இருக்கும் மனிதனை கண்டுபிடிக்க முடியும் நம்மால் நமக்குள் இருக்கும் நபரை கண்டுபிடிக்க முடியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவெளியில் சிறப்பான செயல்பாடு

பொதுவெளியில் சிறப்பான செயல்பாடு

அந்த கேரக்டர் மிகவும் மோசமானவன்தான் அதிகமாக வேஷம் போடுவான் என்றும் விஜய் சேதுபதி மேலும் கூறியுள்ளார். நமக்குள் இருக்கும் இந்த கேரக்டரை நம்மால் விளக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆனாலும் பொதுவெளியில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு சிறப்பான பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X