கமலின் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் படு பிஸியாக உள்ள நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என கலக்கி வருகிறார்.

லீடிங் ரோல்ஸ் மட்டுமின்றி வில்லன், சப்போர்ட்டிங் ரோல்ஸ் என அனைத்து ரோல்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். அவரது எதார்த்தமான நடிப்பை கண்டு ரசிக்கவே ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

கமலின் விக்ரம்

கமலின் விக்ரம்

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

கையெழுத்திடவில்லை

கையெழுத்திடவில்லை

இந்தப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை என தெரிகிறது.

பேட்டியில் தகவல்

பேட்டியில் தகவல்

அதே நேரத்தில், விஜய் சேதுபதி இந்த பெரிய வாய்ப்பை இழக்க விரும்பவில்லை, இதனால் அவர் தனது ஷெட்யூலில் ஒரு மாற்றத்தை செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்ட்டலுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் மிரட்டல்

மாஸ்டர் படத்தில் மிரட்டல்

மேலும் அவர் என்ன முடிவு செய்யப் போகிறார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X