முத்தையா முரளிதரன் போற்றத்தகுந்தவர்.. அவரது கதை சொல்லப்பட வேண்டும்.. புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

சென்னை: முத்தையா முரளிதரன் போற்ற தகுந்த மனிதர் என்றும் அவரது ஆளுமையும் வாழ்க்கையும் தனக்கு பிடிக்கும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியுள்ளார்.

Recommended Video

Shame on Vijay Sethupathi • விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பேசும் படமாக 800 படம் உருவாகவுள்ளது.

முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்திருப்பதால் படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே இதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தையா முரளிதரன், ராஜ பக்சேவின் ஆதரவாளர் என்பதால் ஈழத் தமிழர்கள் பலரும் இந்தப் படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

இருந்த போதும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது. முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வீரர் என்பதால் ஐபிஎல் போட்டிக்கு இடையே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி பேட்டி

விஜய் சேதுபதி பேட்டி

இந்தப் படத்தில் முரளிதரனின் குழந்தைப் பருவம் முதல் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை அவர் கடந்து வந்த பாதை முழுவதும் இடம்பெறும் என தெரிகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளது பேசியிருக்கிறார்.

எனக்கு பிடிக்கும்

எனக்கு பிடிக்கும்

முத்தையா முரளிதரனின் கதையைக் கேட்டது அவருடன் செலவிட்ட நேரம் என அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது. எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை அவர். அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும்.

கதை சொல்லப்பட வேண்டும்

கதை சொல்லப்பட வேண்டும்

ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். அழகான மனிதர் அவரது கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

திறமையான நடிகர்

திறமையான நடிகர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதியை புகழ்ந்திருந்தார். அதாவது கதை ரெடியானவுடன், விஜய் சேதுபதியை நடிக்க வைக்கதான் யோசித்தோம். அவர் ஒரு திறமையான நடிகர் என்று நினைக்கிறேன். அவர் முழுமையான நடிகர் என்று நம்புகிறேன். கண்டிப்பாக படத்திற்கான அதிசயத்தை அவர் நிகழ்த்துவார் என்று கூறியிருந்தார்.

வெட்கமில்லையா?

வெட்கமில்லையா?

இதனிடையே நேற்று 800 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதால் கடுப்பான தமிழ் ரசிகர்கள், விஜய் சேதுபதி வெட்கமில்லையா எனக் கேட்டு சமூக வலைதளங்களில் சரமாரியாக திட்டி தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X