பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!

சென்னை : நடிகை காஜல் அகர்வால் பேயாக நடித்துள்ள கருங்காப்பியம் திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

டீகேயின் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி மற்றும் ஈரானிய நடிகை நொய்ரிகா என ஐந்து லீட்ரோலில் நடித்துள்ளனர்.

பிரசாந்த் இசையமைத்துள்ள இப்படத்தில் கலையரசன், யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன், அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர், குக் வித் கோமாளி புகழ், விஜே பார்வதி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கருங்காப்பியம்

கருங்காப்பியம்

சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தை கொண்ட இப்படத்தில், பண்ணையாரின் மகளான காஜல் அகர்வால் ஒரு அதிசய சக்தி கொண்ட பெண்ணாக இருக்கிறாள். இவருக்குள் இருக்கும் இந்த அதிசய சக்தியால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறாள். ஒரு கட்டத்தில் காஜல் அகர்வால் பேயாக மாறிவிடுகிறாள்.

கருங்காப்பியம் டிரைலர்

கருங்காப்பியம் டிரைலர்

வெற்றிவேல் டாக்கீஸ் தயாரித்திருக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாக உருவாகி உள்ளது. விரைவில் திரையரங்கிலி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகறிது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டார்க் ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள இந்த டிரைலருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பழமையான புத்தகம்

பழமையான புத்தகம்

டிரைலரின் ஆரம்பத்தில் நடிகை ரெஜினா, 100 வருட பழமையாக கருங்காப்பியம் புத்தகத்தை படிக்கிறார். அந்த புத்தகத்தில் இன்றைக்கு நடக்கும் விஷயங்கள், இப்போது இருக்கும் பிரதமர், ஏன் லாக் டவுன் பற்றிக்கூட துள்ளியமாக கணிந்து எழுதி இருப்பதாக பதற்றத்துடன் பேசுகிறார். இதையடுத்து,கொடூரமான பேயாக அலப்பறை கொடுக்கிறார் காஜல் அகர்வால்.

காஜர் அகர்வாலின் பேயாட்டம்

காஜர் அகர்வாலின் பேயாட்டம்

பல விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் காஜல் அகர்வால் முதல் முறையாக இந்த படத்தில் பேயாக நடித்து இருப்பதால், காஜல் அகர்வாலின் பேயாட்டத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வாக உள்ளனர். இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்துள்ளதால், இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X