தெலுங்கு சினிமாவிலும் கொடியை பறக்கவிடும் விஜய் சேதுபதி.. புஷ்பா படத்துல என்ன கேரக்டர் தெரியுமா?

சென்னை: புஷ்பா படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் கதாப்பாத்திரம் கறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

அமேஸானில் ரிலீஸ் ஆகப் போகிறதா மாஸ்டர் படம்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

நடிகர் விஜய் சேதுபதி, ஏராளமான படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அசத்தி வருகிறார்.

மாஸ்டர்

மாஸ்டர்

பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளி போகிறது.

மலையாளம்

மலையாளம்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அங்கேயும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் படையை உருவாக்கி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் படத்தில் நடித்தார்.

குவியும் வாய்ப்பு

குவியும் வாய்ப்பு

இதேபோல் தெலுங்கு படங்களுக்கும் முன்னுரிமை வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிகம் வில்லன் கதாபாத்திரத்திற்கே விஜய் சேதுபதி அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்.

அல்லு அர்ஜூனுக்கு வில்லன்

அல்லு அர்ஜூனுக்கு வில்லன்

அந்த வகையில் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் ரிலீஸாகி பெரும் வைரலானது. அடுத்ததாக சுகுமார் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

புஷ்பா ஃபர்ஸ்ட் லுக்

புஷ்பா ஃபர்ஸ்ட் லுக்

அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று படக்குழு வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு 'புஷ்பா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது.

வனத்துறை அதிகாரி

வனத்துறை அதிகாரி

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X