விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் திரையரங்குகளில் வெளியீடு?

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி.

Recommended Video

9 Years Of Thuppaki Movie | Rewind Raja | Filmibeat Tamil

காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கி தயாரித்துள்ள இந்தப் படம் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காக்கா முட்டை படம்

காக்கா முட்டை படம்

ஏழை சிறுவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்திய படம் காக்கா முட்டை. தனுஷ் தயாரித்திருந்த இந்தப் படம் உலகமயமாக்கலை கேள்விப் படுத்தியது. இந்த படத்தை இயக்கியிருந்தார் மணிகண்டன். அவருக்கு இந்தப் படம் சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்தது.

இயக்குநர் மணிகண்டன்

இயக்குநர் மணிகண்டன்

முதன்மை இயக்குநராக அவர் அறியப்பட்டார். இதையடுத்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டணை ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். இதில் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்தப் படங்கள் மணிகண்டனுக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.

கடைசி விவசாயி படம்

கடைசி விவசாயி படம்

இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் மீண்டும் கூட்டணி வைத்து கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தில் யோகி பாபு சிறப்பான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் லீட் ரோலில் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தோஷ் நாராயணன் இசை

படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைத்த நிலையில், பின்பு சந்தோஷ் நாராயணன் தற்போது இசையமைத்துள்ளார். படத்தில் விஜய் சேதுபதி பரதேசி கோலத்தில் உள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவுற்று படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் விநியோகத்திற்காக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

திரையரங்குகுளில் வெளியீடு?

திரையரங்குகுளில் வெளியீடு?

இந்நிலையில் படம் அடுத்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த நல்ல படங்கள் திரையரங்குகளில் வெளியாவது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X