விரல் முழுக்க மோதிரம்.. கை முழுக்க வாட்ச்.. கழுத்தில் ருத்ராட்சம்.. விஜய் சேதுபதியின் நியூ பிக்!

சென்னை: விரல் முழுக்க மோதிரம் கை முழுக்க வாட்ச் கழுத்தில் ருத்ராட்சம் என வித்தியாசமான தோற்றத்தில் கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுல் ஒருவராக உள்ளார். தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து சினிமாத் துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.

அவரது திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையே பெரும்பாலும் தேர்வு செய்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் ஏழை மக்களுக்கு உதவும் தயாள குணத்தால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக உள்ளார்.

கடைசி விவசாயி

கடைசி விவசாயி

இந்நிலையில் கடைசி விவசாயி என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மணிகண்டன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயமே கேள்விக்குறியாகி வரும் இந்த காலத்தில் கடைசி விவசாயி படம் விவசாயம் மற்றும் விவசாயிகளை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் விவசாயிகள் படும்பாட்டையும் சொல்லும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது.

புதிய கெட்டப் போட்டோ

புதிய கெட்டப் போட்டோ

இதில் விஜய் சேதுபதி மனநிலை பாதிக்கப்பட்ட விவசாயி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியாகியுள்ளது.

வைரலாகும் போட்டோ

அதில் அழுக்கு வேட்டி சாட்டை, விரல்கள் முழுவதும் மோதிரம், கையில் ஐந்து ஆறு வாட்சுகள், கழுத்தில் ருத்ராட்சம், பரட்டை தலை, நெற்றியில் பட்டை என ஆளே ஒரு டைப்பாக உள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் இந்த புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X