கால் மேல் கால்போட்டு செம கெத்தாய் சிகரெட் பிடிக்கும் விஜய் சேதுபதி.. வைரலாகும் உப்பென ரயனம் போஸ்டர்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி கால் மேல் கால்போட்டு செம கெத்தாய் சிகரெட் பிடிக்கும் தெலுங்கு படத்தின் போஸ்டர் வைரலாகி வருகின்றது.
Recommended Video
மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தன்னுடைய தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்திருக்கிறார்.
முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி ஹீரோ மட்டுமின்றி வில்லன் கதா பாத்திரங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார்.

கொரோனா அச்சுறுத்தல்
தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மாஸ்டர் படம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு படம்
நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியின் இரண்டாவது தெலுங்கு படமான உப்பெனா படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

செகன்ட் லுக் போஸ்டர்
உப்பெனா படத்தில் ரயனம் என்ற கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில் உப்பெனா படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் செகன்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டது.
சிகரெட் பிடித்து
அந்த புகைப்படத்தில் வேட்டி சட்டையுடன் கெத்தாக அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ஏற்கனவே அப்படத்தில் அவரது முதல் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











