பீஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி

சென்னை : ஜோஜூ ஜார்ஜ், சித்திக், ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது பீஸ் மலையாளத் திரைப்படம்

அறிமுக இயக்குநர் கே சன்பீர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்லோஸ் என்ற டெலிவரி பாய் கேரக்டரில் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கே சன்பீர்

அறிமுக இயக்குநர் கே சன்பீர்

அறிமுக இயக்குநர் கே சன்பீர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ். இந்த படத்தில் ஜோஜூ ஜார்ஜ், சித்திக், ரம்யா நம்பீசன், ஆஷா சரத், அதிதி ரவி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் படமாக இந்த படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார்.

முக்கிய சம்பவங்கள்

முக்கிய சம்பவங்கள்

படத்தில் கார்லோஸ் என்ற டெலிவரி பாய் கேரக்டரில் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ளார். அவரின் வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட்டது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

எர்ணாகுளம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தில் ஆஷா சரத் சுயதொழில் செய்யும் தொழிலதிபராக படத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஷேர் செய்த விஜய் சேதுபதி

ஷேர் செய்த விஜய் சேதுபதி

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி தற்போது ஷேர் செய்துள்ளார். நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் படக்குழுவினருக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட அனைவரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனித்தனியாக டேக் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X