எஸ்பி ஜனநாதன் உடல் தகனம்.. இறுதி ஊர்வலத்தில் கண்கலங்கி.. மலர்தூவிச் சென்ற நடிகர் விஜய் சேதுபதி!

சென்னை: இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி கண்கள் கலங்கியப்படியே மலர் தூவி சென்றார்.

Recommended Video

கனத்த இதயத்தோடு விடை தருகிறோம் | SP JANANATHAN Last rites

பிரபல இயக்குநரான எஸ்பி ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்பி ஜனநாதன் முதல் படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

விஜய் சேதுபதியின் லாபம்

விஜய் சேதுபதியின் லாபம்

தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து லாபம் படத்தை இயக்கினார்.

திடீர் உடல்நலக்குறைவு

திடீர் உடல்நலக்குறைவு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. எடிட்டிங் பணியில் இருந்த போதுதான் கடந்த வியாழக்கிழமை எஸ்பி ஜனநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஏராளமானோர் அஞ்சலி

ஏராளமானோர் அஞ்சலி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்பி ஜனநாதன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

விஜய் சேதுபதி அஞ்சலி

விஜய் சேதுபதி அஞ்சலி

நடிகர் ஜெயம் ரவி, அருண் விஜய், ஆரி, சௌந்தரராஜா, தன்ஷிகா, வெற்றி மாறன், சீனு ராமசாமி, சிம்பு தேவன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று நடிகர் விஜய் சேதுபதி எஸ்பி ஜனநாதன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கண்கள் கலங்கியப்படி..

கண்கள் கலங்கியப்படி..

தொடர்ந்து எஸ்பி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு எஸ்பி ஜனநாதனின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விஜய் சேதுபதி கண்கள் கலங்கியப்படி மலர்களை தூவி சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X