டயட்டா அதெல்லாம் எனக்கு செட் ஆகாது.. விஜய் சேதுபதி ஓபன் டாக்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி உணவு குறித்து பேசியிருப்பது அவரது ரசிகர்களையும், உணவு பிரியர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.

கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்தவர் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்திருக்கிறார். அதன் பிறகு தீவிர முயற்சியின் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். சீனுராமசாமி இயக்கிய அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக விஜய்சேதுபதி கவனிக்கப்படும் ஹீரோவானார்.

தொடர் வெற்றியில் விஜய் சேதுபதி

தொடர் வெற்றியில் விஜய் சேதுபதி

இதனையடுத்து நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வென்றவர்கள் படம் எடுக்க வந்தபோது அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் விஜய் சேதுபதி. அப்படி அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்கள் தொடர் வெற்றி பெற்றன. இதனால் கோலிவுட்டில் உடனடியாக உச்சத்திற்கு சென்றார் விஜய் சேதுபதி. மேலும் அவரது பேச்சுக்கும் , நடிப்புக்கும் என பலர் ரசிகர்களாகினர்.

 டோலிவுட், பாலிவுட்டில் விஜய் சேதுபதி

டோலிவுட், பாலிவுட்டில் விஜய் சேதுபதி

தொடர்ந்து விஜய் சேதுபதி டோலிவுட், பாலிவுட்டில் விஜய் சேதுபதி கால் பதித்திருக்கிறார். சமீஅப்த்தில் அவர் நடிப்பில் ஃபர்ஸி வெப் சீரிஸ் வெளியானது. காவல் துறை அதிகாரியாக அவரது நடிப்பு ரசிக்கும்படியாகவே இருந்தது. அதேபோல் இங்கிருந்து இந்திக்கு செல்லும் மற்ற நடிகர்கள் டப்பிங் பேச சிரமப்பட்ட விஜய் சேதுபதி இந்தியில் சொந்தமாகவே டப்பிங் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஃபர்ஸி வெப் சீரிஸ் மட்டுமின்றி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார் சேதுபதி.

டயட் என்றால் பிடிக்காது - விஜய் சேதுபதி

டயட் என்றால் பிடிக்காது - விஜய் சேதுபதி

இந்நிலையில் ஃபர்ஸி வெப் சீரிஸுக்காக சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் விஜய் சேதுபதி. அப்போது பேசிய அவர், 'சாப்பாட்டில் டயட் இருப்பது எனக்கு நம்பிக்கை இல்லை. எப்போதுமே சுவையான உணவை மட்டுமே சாப்பிட விரும்புகிறேன். ஒருவர் சுவையான சாப்பாட்டை சாப்பிடாவிட்டால் அவரது வாழ்க்கையில் சுவை இருக்காது. குறைந்த கலோரி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இல்லாமல் நல்ல உணவை சாப்பிட வேண்டும். விரும்பியதை சாப்பிட வேண்டும்" என்றார்.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய விஜய் சேதுபதி

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய விஜய் சேதுபதி

பொதுவாக ஒருவர் ஹீரோவாக வென்றுவிட்டால் அந்தப் பாதையில் செல்லவே விரும்புவார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ ஹீரோவாக உச்சத்தில் இருக்கும்போதே விதவிதமான கேரக்டர்களை மற்ற நடிகர்களின் படங்களில் செய்கிறார். சமீபத்தில்கூட மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X