சாமியை குளிக்க வைக்கிறத காட்றீங்க.. துணி மாத்துறத மறைக்கிறீங்க.. மீண்டும் சர்ச்சையில் விஜய் சேதுபதி!
சென்னை: கோவில்களில் அபிஷேகம் நடத்துப்படுவது குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அசத்தி வருகிறார்.
தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருகிறார்.

கடவுள் நம்பிக்கை
மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி கடந்த சில நாட்களாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனால் அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகிறார். குறிப்பாக இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

மேலிருந்து வராது
மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, கொரோனாவில் இருந்து காப்பாற்ற கடவுள் வரமாட்டார் என்ற ரிதீயில் பேசினார். கொரோனாவை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான், மேலிருந்து ஒன்று வராது என்றார்.

பேச்சுக்கு எதிர்ப்பு
கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை சாடும் வகையில் இருந்தது அவரது பேச்சு. அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.

சூர்யாவுக்கு பாராட்டு
அண்மையில் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக அவரது கணவரும் நடிகருமான சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு என பாராட்டியிருந்தார்.

கோவில்களில் அபிஷேகம்
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதாவது தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, கோவில்களில் அபிஷேகம் நடத்துவதை கொச்சைப் படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

ஏன் மறைக்கிறார்கள்?
அதாவது ஒரு கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதை பார்த்த ஒரு சிறுமி, அபிஷேகம் முடிந்ததும் திரைப் போட்டு மறைக்கப்பட்டதை பார்த்து ஏன் மறைக்கிறார்கள் என்று தனது தாத்தாவிடம் கேட்டார்.

உடை மாற்றுவதை..
அதற்கு அந்த தாத்தா சாமிக்கு குளிக்கும் போது காட்டுவார்கள், ஆனால் உடை மாற்றும் போது மறைத்து விடுவார்கள் என விளக்கம் கொடுத்தாராம். அதனை ஏற்காத சிறுமி, சாமி குளிப்பதையே காட்டுகிறார்கள் உடை மாற்றுவதை காட்டினால் என்ன என்று கேட்டாராம்

கடும் எதிர்ப்பு..
இப்படி ஒரு கதையை அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்து கடவுகளையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











