Vijay Sethupathi: இயக்குநர் கோகுலுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி.. எதுக்கு தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி துணை கேரக்டர்களில் நடித்து ஹீரோவானவர். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இவரது கேரியரில் சிறப்பான பல படங்கள் இவரது முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளன.

அந்த வகையில் இதற்குதானே ஆசை பட்டாய் பாலகுமாரா படம் விஜய் சேதுபதி கேரியரில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது.

Actor Vijay Sethupathi thanks Director Gokul for this reason

இயக்குநர் கோகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி துணை கேரக்டர்களில் நடித்துதான் சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை துவக்கினார். ஒரு கட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி, 96 போன்ற படங்கள் ஹீரோவாக மட்டுமில்லாமல் ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமானவராகவும் விஜய் சேதுபதியை நிலை நிறுத்தியது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் காட்டிவரும் விஜய் சேதுபதி, தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். குறுகிய காலகட்டத்திலேயே 50வது படத்திற்கான அறிவிப்பை சமீபத்தில் மேற்கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனுடன் தன்னுடைய 50வது படம் குறித்து சமீபத்தில் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் கடந்த மாதத்தில் ஷாருக்கானுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், பாலிவுட்டில் விஜய் சேதுபதியின் மவுசு மேலும் ஏறியுள்ளது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஃபார்சி வெப் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கத்ரினா கையிப் ஜோடியாக மெர்ரி கிறிஸ்துமஸ் படம் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி கேரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து, ரசிகர்களை அவர்பால் அதிகமாக ஈர்த்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வெளியாகி தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஸ்வின், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டவர்கள் நடித்திருத்திருந்தனர். கடந்த 2013ம் ஆண்டில் அக்டோபர் 2ம் தேதி வெளியான இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தது. படத்தில் சுமார் மூஞ்சி குமாரு என்ற கேரக்டரில், குமுதாவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் அதிரடி செய்திருந்தார் விஜய் சேதுபதி. அவரது கேரியர் பெஸ்ட் கேரக்டர் இது.

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்று அவர் கூறும்போதெல்லாம் தியேட்டர் அதகளப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்ததையொட்டி, வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் இந்தப் படத்திற்காக இயக்குநர் கோகுலுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி ஹாப்பி அண்ணாச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X