பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி.. காட்டுத் தீயாய் பரவும் செய்தி !

சென்னை : இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே காட்டுத் தீயாக வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு படைப்பிலும் புதுமையையும், வித்தியாசத்தையும், சிறந்த கதை அம்சத்தையும் காட்டி வருபவர் இயக்குனர் சசி. இவர் இயக்கிய படங்கள் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலான படங்கள் பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்காமல் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். இவரால் பல புதுமுகங்கள் திரைக்கு அறிமுகமாகி உள்ளனர்.

நம்பிக்கையான இயக்குனர்

நம்பிக்கையான இயக்குனர்

இயக்குனர் சசி தனது திரை வாழ்க்கையை சொல்லாமலே படத்தின் மூலம் தொடங்கிய இவர் இன்று வரை பல படங்களை இயக்கி பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் 2008ல் இயக்கிய பூ என்ற படம் பல விருதுகளை தட்டிச் சென்றது. நடிகர் ஸ்ரீகாந்துடன் இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளார்.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

பல இயக்குனர்கள் தங்களது படங்களில் மக்களுக்கு நன்கு தெரிந்த நடிகர்களை வைத்து இயக்கத்தான் ஆசைப்படுவார்கள். அப்போதுதான் அந்த படம் வெற்றி பெறும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால், இயக்குனர் சசி தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வதோடு அவர்களுக்கு நல்ல ஒரு திரைப் பயணத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

இவர் அறிமுகப்படுத்திய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த், ஸ்ரீகாந்த் தமிழில் முதன்முதலில் சசி அவர்களின் இயக்கத்தில் ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகை பூமிகா உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் ஸ்ரீகாந்த்க்கு இந்தப்படம் கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்தது.

மாரியின் காதல்

மாரியின் காதல்

மீண்டும் தன்னை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ரீகாந்தை வைத்து பூ என்ற அற்புதமான படைப்பை கொடுத்திருப்பார். இந்த படத்தில் நடிகை பார்வதி மேனனை முதன்முதலாக தமிழில் அறிமுகம் படுத்தி இருந்தார். இதில் பார்வதி மேனன் மாரி என்ற கதாபாத்திரத்தில் தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி படம் பார்ப்போர் மனதையும் கரைய வைத்தார். இந்தப்படம் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் இன்றளவும் பார்வதியின் கேரியரில் ஒரு பெஸ்ட் பிலிம் ஆக இருந்து வருகிறது. மேலும் இயக்குனர் சசி இந்த படத்துக்காக பெஸ்ட் டைரக்டர் விருதை அகமதாபாத் பிலிம் பெஸ்டிவலில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான கதை

தனித்துவமான கதை

மேலும் இவர் இயக்கிய வெற்றி படங்கள் ஏராளம். இவர் பிச்சைக்காரன் என்ற படத்தை நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி இருந்தார் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் சக்கை போடு போட்டது வியாபார ரீதியாக நல்ல வெற்றியும் பெற்றது. இவ்வாறு இவர் இயக்கிய வெற்றிப் படங்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறு எப்போதும் புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சசி இப்பொழுது தமிழில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகரை வைத்து இயக்குவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இவர் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்குகிறார். அதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் இப்பொழுது புதிதாக மாஸ் அப்டேட் ஒன்று வந்திருக்கிறது அது இயக்குனர் சசி தென்னிந்திய மக்களால் நடிப்பிற்காகவும், தனது இயல்பான குணத்திற்கும் பெரிது பாராட்டப்பட்டு வரும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்குவதாக சொல்லப்படுகிறது.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

நடிகர் விஜய் சேதுபதி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் ஒன்றி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்து அந்த கதாபாத்திரத்திற்கு யாரும் எதிர்பார்க்காத புதிய வடிவத்தை கொடுக்க கூடியவர். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இங்குண்டு. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படங்களில் தொடங்கி இப்போது விக்ரம் வேதா, மாஸ்டர் வரை அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

Recommended Video

Actress Vaibhavi Shandilya | சூர்யா-ஜோதிகா காதல் எனக்கு ரொம்ப புடிக்கும் |V-Connect |Filmibeat Tamil
அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சில மணி நேரத்திற்கு முன்பு வந்த செய்தி ஒன்று காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. அது இவர் இயக்கும் ஹரிஷ் கல்யாண் படத்தைத் தொடர்ந்து சசி இயக்கப்போகும் அடுத்த படத்தின் அப்டேட் வந்துள்ளது அதில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை கேட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வித்தியாசமான படங்களை இயக்கக்கூடிய ஒரு இயக்குனரும், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டிக்கொண்டே இருக்கும் நடிகரும் ஒரே படத்தில் இணைந்தால் வேறு என்ன வேண்டும், ரசிகர்களுக்கு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தான் இருக்கும். இதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X