இந்த காசு ஏன் பிள்ளைக்கு ஈடாகுமாய்யா.. தாயின் கேள்வியால் வாயடைத்து கண்ணீரால் பதிலளித்த விஜய்சேதுபதி!
சென்னை: மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கினார்.
Recommended Video
பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி நேற்று பகல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 15 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட அவர் நேற்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பலரும் இரங்கல்
45 வயதே ஆன வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் ரசிக்ரகள் மத்தியிலும் சக நடிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்தனர்.

நேரில் அஞ்சலி
வடிவேல் பாலாஜியின் உடல் சேத்துப்பட்டு எம்எஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

விஜய் சேதுபதி
ரசிகர்களும் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேற்று முதல் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதியும் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நிதியுதவி
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி, நிதியுதவியும் அளித்தார். ஆனால் அதனை பெற மறுத்த வடிவேல் பாலாஜியின் அம்மா, இந்த காசு என் பையனுக்கு ஈடாகுமாய்யா என்று கேட்டு கதறினார். தொடர்ந்து இப்படி போயிட்டியேடா என மகனை அணைத்துக் கண்ணீர் விட்டார்.

கண்ணீரோடு சோகமே உருவாய்..
வடிவேல் பாலாஜியின் தாய் கேட்ட கேள்விக்கு வார்த்தையால் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போன விஜய்சேதுபதி கண்ணீரோடு சோகமே உருவாய் நின்றார். மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் பள்ளி செல்லும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











