தொடாமல் காதல் சாத்தியமா.. சாத்தியப்படுத்திய 96.. 4 ஆண்டுக் கொண்டாட்டத்தில் படம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் 96.

காதலுக்கும் காமத்திற்கும் இடையில் ஒரு இடைவெளிதான் இருக்கும் என்று கூறப்பட்டாலும் அந்த இடைவெளியை விட்டுவிடாமல் பயணிக்கும் காதலர்களை கண்முன்னே காட்டியது 96.

இந்தப் படத்தில் திருமணத்திற்கு பின்பு தன்னுடைய முன்னாள் காதலனை சந்திக்க நேரும் பெண்ணின் அனுபவங்களை கதைக்களமாக கொண்டிருந்தார் இயக்குநர்.

96 படம்

96 படம்

நடிகர்கள் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான காதல் காவியம் 96. பிரேம் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் இன்றுவரை அதிகமான ரசிகர்களால் குறிப்பாக காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலியை சந்திக்கும் ராம்

காதலியை சந்திக்கும் ராம்

பள்ளிக் காலத்தில் காதலை வெளிப்படுத்தாமல் மானசீகமான காதலிக்கும் இருவர், ஒருகட்டத்தில் சூழ்நிலை காரணமாக பிரிய நேர்கிறது. அந்த நிலையில், இவர்களின் காதலும் பிரிய திருமணத்திற்கு பின்பே தன்னுடைய காதலியை சந்திக்கும் நிலைக்கு இந்தப் படத்தின் கேரக்டர் ராம் தள்ளப்படுகிறார்.

கொண்டாட்டத் தருணங்கள்

கொண்டாட்டத் தருணங்கள்

இந்தப் படத்தில் கொண்டாடுவதற்கு அதிகமான தருணங்கள் உள்ளன. எந்தவிதமான பிடிப்பும் இல்லாத ஒரு இளைஞன் தனியாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டாடுவதில் துவங்கி, அவனது பள்ளிப்பருவ காதல் மற்றும் திருமணத்திற்கு பின்பு தன்னுடைய காதலியை சந்திக்கும் தருணம் உள்ளிட்டவை இந்தப் படத்தில் காட்சிகளாக விரிகின்றன.

கண்ணியத்தை காப்பாற்றும் காதலர்கள்

கண்ணியத்தை காப்பாற்றும் காதலர்கள்

ஒரு கட்டத்தில் சந்திக்கும் இவர்கள் இருவரும் ஒரு இரவை ஒன்றாக கழிக்கும் நிலை ஏற்பட்டாலும் தங்களின் கண்ணியத்தை காப்பதாக படம் நிறைவடையும். இறுதிவரை தொட்டுக் கொள்ளாத காதல் சாத்தியமே என்பதை இந்தப் படத்தின் ராம் -ஜானு கேரக்டர்கள் நிரூபித்தன.

4 ஆண்டுகளை கடந்த 96 படம்

4 ஆண்டுகளை கடந்த 96 படம்

படத்தில் சிறுவயது கேரக்டர்களில் நடித்த நடிகர்கள் முதல் நடுவயது கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி, த்ரிஷா வரை அனைத்து கேரக்டர்களும் இந்தப் படத்தில் தங்களது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை கடந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த 96

ரசிகர்களை கவர்ந்த 96

இதையொட்டி படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தப் படம் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் கேரியரில் மிகச்சிறந்த படமாக அமைந்தது. அவர்கள் தங்களது ஆர்ப்பாட்டமில்லாத அழகான மற்றும் இயல்பான நடிப்பால் இந்த படத்தை மேலும் அழகாக்கி இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X