ரசிகர்களுடன் இணைந்து மகாராஜா படத்தை பார்த்த விஜய் சேதுபதி.. அட மாலை, கிரீடமெல்லாம் போட்டிருக்காங்களே

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீசாகியுள்ள சூழலில் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படம் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர்கள் ஆகியவை வெளியாகி படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டமாக பார்த்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay sethupathi Maharaja movie tamil cinema

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள மகாராஜா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளானது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த படத்தில் பாராட்டுகளை பெற்று வருகின்ற. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50வது படம்: முன்னதாக இந்தக் கதையை நிதிலன் சாமிநாதனிடம் கேட்கும்போது தனக்கு இந்த படத்தை 50வது படமாக அறிவிக்கும் எண்ணம் எதுவும் இருக்கவில்லை என்று தன்னுடைய பேட்டியொன்றில் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை கேட்டபோது தன்னுடைய அருகில் இருந்த உதவியாளர்கள், தான் 50வது படத்தை நெருங்கி விட்டதாக கூறியதாகவும் அதையடுத்தே இந்த படத்தை 50வது படமாக அறிவிக்க தான் திட்டமிட்டதாகவும் விஜய் சேதுபதி மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார். இப்பொழுது தான் தன்னுடைய 25வது படமான சீதக்காதியில் நடித்ததாக தனக்கு தோன்றியதாகவும் ஆனால் அதற்குள் 50 படங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

திரையரங்கில் படம்பார்த்த விஜய் சேதுபதி: இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் அவர் ரசிகர்களுடன் இணைந்து மகாராஜா படத்தை திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். முன்னதாக திரையரங்கிற்கு வந்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் மிகச் சிறப்பான மற்றும் உற்சாகமான வரவேற்பை கொடுத்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு ஆளுயர மாலையை அணிவித்த ரசிகர்கள் தலையில் கிரீடத்தையும் சூட்டினர். இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட கிரீடத்தை பக்கத்தில் இருந்த தன்னுடைய ரசிகருக்கு போட்டு அழகு பார்த்தார் விஜய் சேதுபதி. தொடர்ந்து இரண்டாவது முறையும் அவருக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது.

ஆரத்தி எடுத்த ரசிகைகள்: இதையடுத்து அவருக்கு பெண் ரசிகைகள் ஆரத்தி எடுத்தனர். அவர் ஆரத்தி தட்டில் காசு போட்டதையும் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் வில்லன் கேரக்டர்களிலும் விஜய் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. கமல்ஹாசனுடன் விக்ரம் 2 படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ரசிகர்களை கவர்ந்த மகாராஜா படம்: இந்நிலையில் தொடர்ந்து வில்லன் கேரக்டர்களை ஏற்று நடிப்பதால் ஹீரோ இமேஜ் போவதாக தன்னுடைய நலன் விரும்பிகள் கூறியதாகவும் இதனால் தொடர்ந்து வில்லன் கேரக்டரில் நடிக்கப்போவதில்லை என்றும் சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவரது மாசான மற்றும் அழுத்தமான நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் லட்சுமி யார் .என்பதற்கு விடை கிடைத்துள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X