லட்சுமியை கண்டுபிடிச்சி கொடுங்க.. இல்லன்னா.. வெளியானது விஜய் சேதுபதியின் மிரட்டலான மகாராஜா ட்ரெயிலர்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், கேரக்டர் ரோல்கள் என இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் அடுத்ததாக விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான படமாக மகாராஜா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் மகாராஜா படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டிய சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரில்லர் பாணியில் படம் உருவாகியுள்ள நிலையில் இந்த ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்பயணம் மிகவும் சுவாரசியங்கள் நிறைந்தது. தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் குறுகிய காலங்களிலேயே தெலுங்கு, இந்தி என வலம் வந்து ஏராளமான ரசிகர்களை கலந்தவர். இதே போல ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்காது ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்கள் என பலவகையாக தன்னை வெளிப்படுத்தி தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டவர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், முன்னதாக சில படங்களில் சிறிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.
மகாராஜா படம்: தொடர்ந்து வித்தியாசமான படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்த விஜய் சேதுபதி, ஒரு கட்டத்தில் ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள படம் மகாராஜா. நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது மகாராஜா படம். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
மகாராஜா ட்ரெய்லர் ரிலீஸ்: இந்நிலையில், இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. இதில் லட்சுமியை கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று தொடர்ந்து போலீசாரை விஜய் சேதுபதி கேட்பதாகவும் ஆனால் லட்சுமி என்பது என்ன என்பதை அவர் கூறாமல் இருப்பதாகவும் காணப்படுகிறது. இதனால் போலீசார் மிகவும் டென்ஷன் ஆவதாகவும் ட்ரெய்லரில் காணப்படுகிறது. அடுத்தடுத்து மிரட்டலான காட்சிகளுடன் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்ராஜ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லட்சுமியை கண்டுபிடிச்சி கொடுங்க: இந்த ட்ரெய்லரின் இறுதிவரை லட்சுமி என்றால் என்ன என்று குறிப்பிடாமலேயே படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த ட்ரெய்லர் இந்த படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











