Actor Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் ஏஸ் படம்.. படக்குழு வெளியிட்ட க்யூட் போட்டோஸ்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி -ஆறுமுக குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஏஸ். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படம் சூதாட்டத்தை மையமாகக் கொண்ட படம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார்.7Cs என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் மேலும் படத்தில் யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது படத்தின் க்யூட்டான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Actor Vijay Sethupathi s Ace movie new stills released

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ளது மகாராஜா. விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகி வருகிறது ஏஸ். இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. 7Cs என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஆறுமுககுமார். இந்த படத்தின் டைட்டில் பிரமோ மூலம் படம் சூதாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி -ருக்மிணி வசந்த் ஜோடி: படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார். இந்த படம் மூலம் அவர் தமிழில் என்ட்ரியாகவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் ரிலீசாகவுள்ள ஏஸ் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் புதிய ஸ்டில்ஸ் தற்போது வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. படத்தில் மிகவும் பாந்தமான மற்றும் இளமையான லுக்கில் விஜய் சேதுபதி காணப்படுகிறார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: விஜய் சேதுபதியுடன் ருக்மிணி வசந்த், யோகி பாபு ஆகியோர் இந்த புகைப்படங்களில் இணைந்து காணப்படுகின்றனர். விஜய் சேதுபதி மற்றும் ருக்மிணி வசந்தின் ஜோடி பொருத்தம் இந்த புகைப்படங்களில் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் விஜய் சேதுபதி -கத்ரினா கைஃயிப் கூட்டணியில் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியான சூழலில் இந்த ஆண்டிலேயே ஏஸ் படம் ரிலீசாகவுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் அவரது மகாராஜா படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஏஸ் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X