Ace Public Review: விஜய்சேதுபதியின் ’ஏஸ்’.. சுமாரா? சூப்பரா? ரசிகர்களின் விமர்சனம்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'ஏஸ்'. ஆறுமுக குமார் இயக்கி இந்த படத்தில், விஜய் சேதுபதியுடன் ருக்மணி வசந்த், யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பிரித்விராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படம் இன்று தியேட்டரில் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்

படம் நல்லா இருக்கு: படம் பார்த்த ரசிகை ஒருவர், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரொம்ப நன்றாக இருந்தது. படத்தின் கிளைமாக்ஸ் இப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை. அதேபோல, விஜய் சேதுபதி இதற்கு முந்தைய படத்தில் நடித்ததை விட கொஞ்சம் வித்தியாசமாக நடித்து இருக்கிறார். நாம் நினைப்பதை விட சில காட்சிகள் வித்தியாசமாக இருக்கிறது. படம் ஒரே மாதிரி காதல் திரைப்படமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. வார கடைசியில் ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இந்த படம் வந்து இருக்கிறது. முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இந்த திரைப்படத்தில் இல்லை, குடும்பமாக சேர்ந்து இந்த திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசிக்கலாம் என்றார்.

ace vijay sethupathi public review

விஜய் சேதுபதி,யோகி பாபு சூப்பர்: படம் பார்த்த மற்றொரு ரசிகை, படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில், வரும் ஒரு ரேஸ் சீனில், அடுத்து என்ன நடக்கும், என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. படம் கடைசி வரையில் போர் அடிக்கவேவில்லை. படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக படத்தில் நடித்திருந்தாலே அந்த படத்தை அனைவரும் பார்போம். இந்த படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள் அது மிகவும் நன்றாக இருந்தது. யோகி பாபுவின் காமெடி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கு. அதேபோல ஆக்ஷன் சூப்பராக இருந்தது. அதை ஸ்கிரீனில் பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக தெரிகிறது. குடும்பத்தோடும் நண்பர்களுடனும் சேர்ந்து இந்த படத்தை நிச்சயம் பாருங்க பிடிக்கும் என்றார்.

முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்: படம் பார்த்த மற்றொரு ரசிகர், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதியும், யோகி பாபு இந்த படத்தில் சேர்ந்தது இருக்கிறார்கள். அடுத்தடுத்து, பாடல் காட்சிகளும் சண்டையும் வருவதால் படம் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு தகுந்தாற் போல இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருந்தார்கள். நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாக ஏஸ் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏஸ் திரைப்படம் இன்று காலை 10 மணிக்கு வெளியான நிலையில்,சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கத்திற்கு விஜய் சேதுபதி தனது ரசிகர்களுடன் படத்தை பார்த்தார். படம் பார்க்க வந்த ரசிகர்கள் விஜய் சேதுபதியுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். மேலும், விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர்கள் திரையரங்குகளுக்கு முன்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X