Maharaja movie: சீனாவில் ரஜினிகாந்த் பட வசூலை முறியடித்த மகாராஜா.. 3 நாள்ல இத்தனை கோடி வசூலா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, சாச்சனா, சிங்கம்புலி, அபிராமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியான மகாராஜா படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகத்திற்கு உள்ளாக்கியது.

இந்தப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மொழி மாற்றம் செய்யப்பட்டு சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை அலிபாபா குழுமம் 40,000 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் படத்தின் வசூல் 26 கோடிகளை தாண்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்ததாக ஜப்பானிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

rajinikanth vijay sethupathi maharaja movie


மகாராஜா படம்: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 100 கோடி ரூபாய் கலெக்ஷனை சர்வதேச அளவில் குவித்திருந்தது. இந்நிலையில் இந்த படம் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சீன மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அங்கு 40,000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் படம் கடந்த மூன்று நாட்களில் 26 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களத்தில் அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து திரில்லர் பாணியில் படத்தின் கதைகளத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன்.

சீனாவில் மகாராஜா படம்: படத்தில் விஜய் சேதுபதியுடன் சாச்சனா, அபிராமி, சிங்கம்புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். குரங்கு பொம்மை படத்தை அடுத்து பல ஆண்டு இடைவெளியில் இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் கொடுத்திருந்தாலும் அடுத்த படத்திலும் தன்னை சிறப்பான இயக்குநராகவே அவர் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சீனாவில் வெளியிடப்பட்டுள்ள இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை காண தொடர்ந்து சீன ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அடுத்ததாக ஜப்பானிலும் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி பட வசூல் முறியடிப்பு: இந்நிலையில் முன்னதாக வெளியிடப்பட்ட ரஜினிகாந்தின் 2.ஓ படத்தின் வசூலை இந்த படம் முறியடித்துள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் சிறிய அளவிலான குப்பைத் தொட்டியை படக்குழுவினர் பரிசாக கொடுத்தது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பை பெறும். ஆனால் மகாராஜா படத்தின் ரிலீஸ் சீனாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை விஜய் சேதுபதி அதிகரித்து வருவது வெளிப்பட்டுள்ளது.

விடுதலை 2 பட ரிலீஸ்: அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை 2, ட்ரெயின் மற்றும் ஏஸ் படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் விடுதலை 2 படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படததில் வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். முதல் பாகத்தில் இவரது கேரக்டர் சிறிதாக இருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில் மஞ்சு வாரியருடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கவும் வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X