Maharaja: சீனாவில் வசூலை குவிக்கும் மகாராஜா.. 150 கோடி கிளப்பில் இணைந்த மக்கள் செல்வன்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த மாஸ் படங்களை கொடுத்துவருகிறார். அவரது 50வது படமாக வெளியான மகாராஜா படம் அவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கியிருந்த நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் 100 கோடி ரூபாய்களை வசூலித்தது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாராஜா படம் சீனாவில் ரிலீசானது. அலிபாபா நிறுவனம் இந்தப் படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டது. இந்நிலையில் இந்தப் படம் சீன ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த வாரயிறுதியிலேயே படம் 25 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவரது ஆரம்ப கால படங்கள் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்றவை அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அதே ட்ராக்கில் போகாமல், அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். திடீரென பார்த்தால் திருநங்கையாகவும், வயதான கேரக்டர்களிலும் விஜய் சேதுபதியை பார்க்க முடிந்தது. இடையில் வில்லனாகவும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுடன் மல்லுக் கட்டினார்.
மகாராஜா படம்: இதனிடையே அவரது 50வது படமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. குரங்கு பொம்மை என்ற வித்தியாசமான படத்தை கொடுத்து கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகி மாஸ் காட்டியது. சர்வதேச அளவில் 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. படம் மொழிகளை தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படத்தில் அப்பா -மகள் சென்டிமெண்டையும் இணைத்திருந்தார் இயக்குநர். படம் அனைத்து மொழி ரசிகர்களை கவர்ந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் ரிலீசாகியுள்ளது.
சீனாவில் ரிலீஸ்: அலிபாபா நிறுவனம் இந்தப் படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்ட நிலையில், 40,000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. முதல் வாரத்திலேயே 25 கோடி ரூபாய்களை தாண்டி இந்தப் படம் வசூலித்தது. இந்நிலையில் தற்போது வரை சீனாவில் 40 கோடி ரூபாய்களை இந்தப் படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் வாரயிறுதி நாட்,களாக உள்ள நிலையில், படத்தின் கலெக்ஷன் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையேபடம் தற்போது 150 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 கோடி கிளப்பில் இணைந்த மகாராஜா: முன்னதாக இந்தியாவில் 110 கோடியும் தற்போது சீனாவில் 40 கோடியும் வசூலித்துள்ள மகாராஜா படம் இந்த சாதனையை எட்டியுள்ளது. இந்தப் படத்திற்கு சீன ரசிகர்களின் அபரிமிதமான வரவேற்பையடுத்து படம் ஜப்பானிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜப்பான் நாட்டில் இந்திய படங்களுக்கு அதிகமான வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்தின் படங்களை பார்க்க அவர்கள்அதிகமாக ஆர்வம் காட்டி வரும் நிலையில், மகாராஜா படமும் அவர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











