மீண்டும் ஃபார்மில் விஜய் சேதுபதி.. பட்டையை கிளப்பும் மகாராஜா பட வசூல்.. 3 நாட்களில் இவ்வளவா!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி குறைவான இடைவெளிகளில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் கேரக்டர் ரோல்களிலும் அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி கத்ரீனா கையிஃப்புடன் விஜய் சேதுபதி நடித்திருந்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி விஜய் சேதுபதி -நிதிலன் சாமிநாதன் கூட்டணியில் வெளியாகி உள்ளது மகாராஜா படம். இந்த படம் கடந்த மூன்று நாட்களில் மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. விஜய் சேதுபதி மீண்டும் தனது ஃபார்மிற்கு திரும்பி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி: விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ், அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அப்பா மற்றும் மகள் இடையே காணப்படும் அழகான பாசப்பிணைப்பு இந்த படத்தில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. குரங்கு பொம்மை படம் மூலம் கவனத்தை ஈர்த்திருந்த இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கி மீண்டும் ரசிகர்களிடையே தன்னுடைய பெஸ்ட்டை வெளிப்படுத்தியுள்ளார். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரகமாக ஓடி வருகிறது.
மகாராஜா படம்: இந்நிலையில் மகாராஜா படம் கடந்த மூன்று நாட்களில் 32.6 கோடி வசூலை ஈட்டி உள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் இது மிகப்பெரிய வசூல் என்றும் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் நிலையில் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில மாதங்களாக விஜய் சேதுபதிக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. அவர் வில்லனாக நடித்து கடந்த ஆண்டில் வெளியான ஷாருக்கானின் ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருந்தது.

விஜய் சேதுபதியின் 50வது படம்: இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்திலும் கத்ரீனா கையிஃப்புடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மெர்ரி கிறிஸ்துஸ் படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி உள்ள மகாராஜா படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக விஜய் சேதுபதி கேரியரில் அமைந்துள்ளது. விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியாகி உள்ள மகாராஜா படம் அவருக்கு மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது இந்த படத்தில் அவர் மீண்டும் தன்னுடைய ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பான பிரமோஷன்: இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அடுத்தடுத்த ட்ரெயிலர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. இந்தப் படத்திற்கு விஜய் சேதுபதி, அபிராமி, நிதிலன் சாமிநாதன் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களை சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். இதுவும் இந்தப் படம் ரசிகர்களை சிறப்பாக ரீச் செய்வதற்கு காரணமாக அமைந்திருந்தது. படம் குறித்தும் தன்னுடைய சினிமா கேரியர், சக நடிகர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை விஜய் சேதுபதி இந்த பேட்டிகளில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











