Actor Vijay sethupathi: உன் தலையை எடுத்த மாதிரி.. தெறிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஜனவரியில் கத்ரீனா கையிஃப்புடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் ரிலீசாகவுள்ளது.
மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் வித்தியாசமான கெட்டப்புடன் விஜய் சேதுபதி காணப்படுகிறார். சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் தற்போது ரிலீஸ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி: பீட்சா படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தன்னை ஹீரோவாக கோலிவுட்டில் நிலை நிறுத்தியவர் விஜய் சேதுபதி. முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தாலும் பீட்சா படமே அவரை ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள காரணமாக அமைந்தது. இந்த படத்தில் முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு சேது வேலைகளில் ஈடுபடுவார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த வளர்ச்சி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
விஜய் சேதுபதியின் 50வது படம்: ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் தன்னை பலவாறாக வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது அவரது 50வது படமாக மகாராஜா படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலிசாகவுள்ள சூழலில் இந்த படத்தின் ட்ரெயிலர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. ட்ரெயிலரில் லட்சுமியை காணவில்லை என விஜய் சேதுபதி செய்த அலப்பறையை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஜா படத்தின் ட்ரெயிலர்: இதிலும் அவர் லட்சுமியை விடவில்லை. லட்சுமியை கண்டுபிடித்து தருமாறு தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் கேட்கும் விஜய் சேதுபதி, ஒரு கட்டத்தில் போலீசாரால் கண்டுபிடித்து தர முடியவில்லை என்றால் சிபிஐக்கு பரிந்துரைக்க முடியுமா என்று கேள்வி கேட்டு போலீஸ் அதிகாரியான நடராஜை கடுப்பேற்றுகிறார். இதனால் நட்ராஜ், விஜய் சேதுபதியை கன்னத்தில் ஓங்கி அறைவதாக தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் காணப்படுகிறது. மேலும் கொலை செய்யும் எல்லைக்கும் விஜய் சேதுபதி செல்வது இந்த ட்ரெயிலர் மூலம் காணப்படுகிறது. படம் மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
ரிலீஸ் ட்ரெயிலர்: இன்னும் இரு தினங்களில் படம் வெளியாக உள்ளநிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய் சேதுபதியும் அடுத்தடுத்த பேட்டிகளையும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ரிலீஸ் ட்ரெயிலரும் பிரமோஷனில் அதிகமான பங்கேற்றுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியை இதுபோன்ற அழுத்தமான கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











