Train: சூட்டிங்கை நிறைவு செய்த டிரெயின் படக்குழு.. சூட்டிங் ஸ்பாட்டில் மக்களிடம் கத்திய மிஷ்கின்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கினுடன் முதல்முறையாக இணைந்துள்ள படம் ட்ரெயின். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் சிம்பிள் ஹயாத்தி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான டிரெயின் செட் போடப்பட்டு சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் மேட்டுப்பாளையத்தின் ரியல் ட்ரெயின் ட்ராக்கில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

ட்ரெயின் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் பீரியட் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. டெவில் படத்திற்கு பிறகு இந்தப் படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay sethupathi Train movie Mysskin tamil cinema


நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்/ நீண்ட காலங்களாக தமிழில் அவரது படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. கடந்த ஜனவரியில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது மெர்ரி கிறிஸ்துமஸ் படம். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 51வது படமாக ஏஸ் படம் உருவாகி வருகிறது.

ட்ரெயின் படம்: ஏஸ் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள சூழலில் விரைவில் இந்த படத்தின் அப்டேட்களை எதிர்பார்க்கலாம். இதனிடையே இயக்குனர் மிஷ்கினுடன் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்துள்ள ட்ரெயின் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரியட் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு டிம்பிள் ஹயாத்தி ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மேட்டுப் பாளையத்தில் நடத்தப்பட்டதாகவும் நிஜமான ட்ரெயின் டிராக்கில் இந்த ஷூட்டிங் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


பொதுமக்களிடம் கத்திய மிஷ்கின்?: இந்த சூட்டிங்கின்போது ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் இயக்குனர் மிஷ்கின் டென்ஷனாகி சகட்டு மேனிக்கு கத்த தொடங்கியதாகவும் இதையடுத்து அவருடைய தம்பியும் டெவில் படத்தின் இயக்குனருமான ஆதித்யா அவரை சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள சூழலில் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இயக்குனர் மிஷ்கினே இந்த படத்தின் இசையமைப்பையும் மேற்கொண்டுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் முன்னதாக உருவாகியுள்ள பிசாசு 2 படத்திற்கு முன்னதாக ட்ரெயின் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ட்ரெயின் சூட்டிங் நிறைவு: கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள டிரெயின் படத்தின் கதைக்களம் முற்றிலும் டிரெயினிலேயே நடப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்துடன் மகாராஜா, விடுதலை 2 என அடுத்தடுத்து அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. தொடர்ந்து வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்ததால் தன் மீதான ஹீரோ இமேஜ் சரிந்துள்ள உணர்ந்துள்ள விஜய் சேதுபதி இனிமேல் வில்லன் கேரக்டர்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள மகாராஜா உள்ளிட்ட படங்கள் அவரது ஹீரோ இமேஜை கூட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X