Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் 51வது படம்.. வெளியானது டைட்டில் டீசர்.. டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்திலும் கடந்த ஜனவரியில் கத்ரீனா கையிஃப்புடன் நடித்து வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் படமும் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் அவரது 50வது படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள VJS51 படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இவை ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்துள்ளன.

Actor Vijay Sethupathi s VJS51 movie s title teaser and first look released

நடிகர் விஜய் சேதுபதி: விஜய் சேதுபதியின் VJS51 படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்பவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜவான் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரியில் விஜய் சேதுபதி, கத்ரீனா கையிஃப்புடன் இணைந்து நடித்த மெர்ரி கிறிஸ்மஸ் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

விடுதலை 2 படம்: இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் விடுதலை 2 படத்தில் வாத்தியார் கேரக்டரில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் இந்த படத்தில் அவருக்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு பிளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்துள்ளார்.

VJS51 படத்தின் டைட்டில்: இந்நிலையில் இன்றைய தினம் அவரது VJS51 படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்திற்கு ஏஸ் (Ace) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூதாட்டத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆறுமுக குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் மலேசியாவில் நடத்தப்பட்டுள்ளது.

ஏஸ் படத்தின் டைட்டில் டீசர்: இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மிகச் சிறப்பான எடிட்டிங்குடன் இந்த டைட்டில் டீசர் உருவாகியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதியின் மகாராஜா படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள சூழலில் அந்தப் படத்தில் சாமானியன் லுக்கில் விஜய் சேதுபதி, ரத்தம் தோய்ந்த அரிவாள் உள்ளிட்டவற்றுடன் காணப்படுவது படத்திற்கான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் முடுக்கி விட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X