மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படம் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி தான் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு வேடம் பிடித்திருந்தால், அது சிறியதாக இருந்தாலோ, வில்லனாக இருந்தாலோ, வயதான வேடமாக இருந்தாலும் சரி. ஒரே மாதிரியான கதைகளையும், கதாபாத்திரங்களையும் விரும்பாத இவர், தனக்கு ஏற்றாப்போல் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Actor Vijay Sethupathy acting in a Telugu movie as Villain

தமிழ் சினிமாவை தொடர்ந்து, மற்ற மொழி படங்களிலும் அதே பாணியை கடை பிடிக்கிறார். அந்த வகையில், மலையாளத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து மார்கோனி மத்தாய் என்ற படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து தெலுங்கில், நடிகர் சிரஞ்சீவியுடன், சைரா நரசிம்ம ரெட்டி என்ற வரலாற்று படத்தில் நடிக்கிறார்.

Actor Vijay Sethupathy acting in a Telugu movie as Villain

மேலும் இந்த படத்தை தொடர்ந்து, சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் ஹீரோவாக நடிக்கும், ஒரு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகிறார். பேட்ட படத்தை அடுத்து அவ‍ர் வில்லனாக நடிக்கும் படம் இதுவாகும்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மேலும் தன்னுடைய மகளை காதலிக்கும் ஹீரோவை மிரட்டும் வில்லனாக இந்த படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Actor Vijay Sethupathy acting in a Telugu movie as Villain

விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடிப்பதும் புதிதல்ல. ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X