குடும்பத்தோடு வந்து ரசிகர் திருமணத்தை நடத்திக் கொடுத்த விஜய் சேதுபதி
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து, பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. வெப் தொடர்களிலும் விஜய் சேதுபதி தொடர்ந்து நடித்து வருகிறார்.
படங்களில் நடிப்பதுடன், தன்னுடைய ரசிகர்களுடனும் தொடர்ந்து சிறப்பான தொடர்பை விஜய் சேதுபதி மெயின்டெயின் செய்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மக்கள் செல்வனாக கொண்டாடப்படும் விஜய் சேதுபதி, ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இமேஜை உடைத்தவர். ஒரு பக்கம், மாமனிதன் போன்ற சிறப்பான படங்களில் நடித்துக் கொண்டே மறுபுறம் விஜய், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
கடந்த ஆண்டில் விக்ரம், மாமனிதன், டிஎஸ்பி, காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்த படங்களை கொடுத்தார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களில் சில படங்கள் சரியாக போகவில்லை. அடுத்ததாக பாலிவுட்டிலும் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

ஃபார்சி வெப் தொடர்
இவரது நடிப்பில் அடுத்ததாக பார்சி வெப் தொடர் வெளியாகவுள்ளது. தி பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த தொடரையும் இயக்கியுள்ளனர். இந்தத் தொடர் வரும் 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதையடுத்து சில பாலிவுட் படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதி
சந்தீப் கிஷனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது மைக்கேல் பம் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ரசிகர்களுடன் சந்திப்பு
இதனிடையே, தன்னுடைய ரசிகர்களையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார். தற்போது தன்னுடைய மனைவியுடன் ரசிகர் ஒருவரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இந்தத் திருமணம் விஜய் சேதுபதி நடத்தி வைத்துள்ள முதல் சுயமரியாதை திருமணம். இதன்மூலம் தான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் ரசிகர்கள் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











