மக்கள் செல்வன்னா மக்கள் செல்வன்தான்.. என்ன காரியம் பண்ணியிருக்கார் பாருங்க விஜய் சேதுபதி!

தேனி: இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றம் மூலமாக நிறைவேற்றியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தனது நடிப்பு திறமையால் பல தரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ளார். ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் நடித்த விஜய் சேதுபதி தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக உயர்ந்திருப்பதற்கு அவரது திறமைதான் காரணம்.

நடிப்பு திறமையோடு தயாள குணமும் கொண்டவர் விஜய் சேதுபதி. பலருக்கும் கேட்காமலேயே பல உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் தேனியை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் மக்கள் செல்வன் என அழைக்கப்டும் விஜய் சேதுபதி படிப்பு செலவுக்காக உதவியுள்ளார்.

உக்ரைனில் படித்துள்ளார்

உக்ரைனில் படித்துள்ளார்

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்.
தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார்.

விண்வெளி வீரர்கள் குழு

விண்வெளி வீரர்கள் குழு

92.5% மதிப்பெண்களுடன் 'A " கிரேடு பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" " சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம்.

போலந்தில் பயிற்சி

போலந்தில் பயிற்சி

தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது.

உதவிய விஜய்சேதுபதி

உதவிய விஜய்சேதுபதி

பயிற்சிக் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது.

மாணவியின் பறிச்சிக்காக தேவைப்படும் தொகையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்தின் சார்பாக அவரின் ரசிகர் மன்ற தலைமை செயலாளர் திரு .குமரன் மற்றும் தேனி நகர தலைவர் விக்னேஷ் ஆகியோர் மூலம் வழங்கினா

பலருக்கும் உதவி

பலருக்கும் உதவி

மேலும் நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருப்பதால் தொலைபேசியின் மூலம் உதயகீர்த்திகாவிடம் பேசி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த அனிதா உட்பட பலரின் குடும்பங்களுக்கு விஜய் சேதுபதி உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X