Vijay Sethupathy: அடுத்த மாதத்தில் சூட்டிங் துவங்கும் மிஷ்கின் -விஜய் சேதுபதி படம்.. சூப்பர் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களுடன் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

தான் ஒரு ஹீரோ என்பதையே மறந்து, தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Actor Vijay Sethupathy -Mysskin combination movie shooting starts next month

விஜய் சேதுபதி -மிஷ்கின் இணையும் புதிய படம்: நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட்டாகி ரசிகர்களை கவர்ந்தார். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவரும் விஜய் சேதுபதி, கமல், ரஜினி, விஜய், ஷாருக்கான் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வில்லனாகவும் நடித்து மிரட்டி வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த ஜவான் படம் அட்லி இயக்கத்தில் வெளியாகி மிரட்டலாக அமைந்தது.

அடுத்தடுத்த வில்லன் கேரக்டர்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, தான் ஒரு ஹீரோ என்பதையே மறந்துவிட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கமல், விஜய், ஷாருக்கான் என அடுத்தடுத்த ஹீரோக்களுடன் வில்லனாக இணைந்துவரும் விஜய் சேதுபதிக்கு இதற்கான அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால்தான் இவர் தொடர்ந்து இத்தகைய கேரக்டர்களை ஏற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட்டில் கத்ரினா கைஃயிப் ஜோடியாக விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் டிசம்பரில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சிறப்பாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதனிடையே அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி இணையவுள்ளார்.

Actor Vijay Sethupathy -Mysskin combination movie shooting starts next month

இந்தப்படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னதாகவே வெளியான நிலையில், இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவுடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ள நிலையில், மீண்டும் மிஷ்கினுடன் விஜய் சேதுபதி இணையவுள்ளார். இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பட்டையை கிளப்பி வருகிறார் மிஷ்கின். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் மிஷ்கின் நடித்திருந்த மாவீரன் படம் வெளியான நிலையில், அடுத்ததாக விஜய்யுடன் மிஷ்கின் நடித்துள்ள லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X