அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக காரணம்.. வெளியான தகவல்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதில் சந்தானமும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி இந்திய அளவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகிவரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ஃபார்சி வெப் தொடர் ஓடிடியில் வெளியானது.

ஃபார்சி வெப் தொடர்

ஃபார்சி வெப் தொடர்

டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்டவர்களும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பாலிவுட்டில் கத்ரினா கையிப்புடன் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் மாநகரம் இந்தி ரீமேக்கான மும்பைக்கார் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

கன்னடத்திலும் அறிமுகம்

கன்னடத்திலும் அறிமுகம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் பிசியாக நடித்துவரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக கன்னடத்திலும் சிவராஜ்குமாருடன் இணைந்து கோஸ்ட் என்ற படத்திலும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவரை பான் இந்தியா ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகன் என்பதே பெருமை

நடிகன் என்பதே பெருமை

ஆனால் சமீபத்தில் தனது பேட்டியில் தன்னை பான் இந்தியா ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்றும் அது பல நேரங்களில் அழுத்தத்தை கொடுக்கும் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். தான் ஒரு நடிகன் என்று கூறப்படுவதையே தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி

அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி

இதனிடையே சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் அவர் கமிட்டாகியுள்ளதாகவும் அவருடன் சந்தானமும் இணைந்துள்ளதாகவும் புகைப்படத்துடன் தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கால்ஷீட் பிரச்சினையால் விலகல்

கால்ஷீட் பிரச்சினையால் விலகல்

ஏப்ரலில் அரண்மனை 4 படத்தின் சூட்டிங்கை துவங்க சுந்தர் சி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காக கால்ஷீட் ஒதுக்க முடியாததால் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்களின்மூலம் சுந்தர் சி ரசிகர்களை கவர்நது வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X