தம்பி விஜய் உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது - சீமான் செய்யும் அறிவுரை
சென்னை: தாய்மொழியை சிதையாமல் பாதுகாக்கும் பொறுப்பு விஜய்க்கு இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இப்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநர். அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களும் வரிசையாக வெற்றியடைந்துள்ளன. குறிப்பாக கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் 500 கோடி ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ
இந்தச் சூழலில் தனது அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்துக்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இணைந்திருப்பதால் இந்தப் படமும் மாஸ்டர் படம் போலவே மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த வாரிசு படம் கடந்த ஜனவரி மாதம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் 300 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்பட்டாலும் துணிவு படத்துடன் ஒப்பிடும்போது கதை ரீதியாக வாரிசு பின் தங்கி இருப்பதாக ரசிகர்களும், விமர்சகர்களும் வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர். இதனால் லியோ படத்தை விஜய் ரசிகர்கள் பெரிதும் நம்பியிருக்கின்றனர்.

லியோ ஷூட்டிங் அப்டேட்
லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் ந்டந்துவருகிறது. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ், சாண்டி மாஸ்டர், அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இவர்களில் மிஷ்கினுக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது. அதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதேபோல் கௌதம் வாசுதேவுக்கான போர்ஷனும் முடிந்துவிட்டதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கருதப்படுகிறது.

படத்தின் டைட்டில்
இதற்கிடையே படத்துக்கு லியோ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது ஒருசேர ஆதரவையும், ஆங்காங்கே சிறு எதிர்ப்பையும் பெற்றுள்ளது. படத்தின் வசனகர்த்தாவான் இயக்குநர் ரத்னகுமாரிடம், லியோ டைட்டில் குறித்து கேட்கப்பட்டபோது, 'இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. எனவே அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் லியோ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பத்திரியகையாளர்களிடம் தெரிவித்தார்.

லியோ டைட்டிலுக்கு சீமான் எதிர்ப்பு
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோ படத்தின் டைட்டில் குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ் படங்களுக்கு தமிழில்தான் பெயர்களை வைக்க வேண்டும். படத்தை தமிழர்கள்தானே பார்க்கிறார்கள்.
லியோ படத்தி டைட்டிலை மாற்றவேண்டும். நமது தாய் மொழியை நாம்தான் சிதையாமல், அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அந்தப் பொறுப்ப தம்பி விஜய்க்கு இருக்கிறது. இப்போது அதிகம் படத்தின் பெயர்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. அவற்றை மாற்ற வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











