ஷேர் பண்ணாதீங்க..அப்பாவுக்காக ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய் மகன்!

சென்னை : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவுக்காக ரசிகர்களிடம் ட்விட்டரில் கெஞ்சி உள்ளார்.

நடிகர் விஜய் தற்போது தனது 66வது படத்திற்காக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து வாரிசு படம் சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

வாரிசு

வாரிசு

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். குடும்ப கதையாக உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட மருத்துவமனையில் நடிகர் விஜய், பிரபு ஆகியோர் நடித்த காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று வெளியானது.

அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

இதையடுத்து, அப்செட் ஆன இயக்குனர் வம்சி, படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் வீடியோ வெளியாவதை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்பாவுக்காக

அப்பாவுக்காக

இதையடுத்து, நேற்று ராஷ்மிகாவும், விஜய்யும் இருப்பது போன்ற வீடியோ வெளியானது, இதனால், படக்குழவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் புகைப்படம், வீடியோக்களை பகிர வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பாவுக்காக விஜய்யின் மகன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X