தெறி ஷூட்டிங்கில் விஜய்யின் மகன், மகள்.... இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம் !

சென்னை : தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படிக்கிறார் என்பதும் இதனை அடுத்து அவர் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது தெறி படப்பிடிப்பில்தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் மொட்டை ராஜேந்திரனுடன் தளபதி விஜய்யின் மகன் மற்றும் திவ்யா ஷாசா உள்ளனர். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

ஹிட் மூவி

ஹிட் மூவி

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி திரைப்படம் தான் தெறி. இந்த திரைப்படத்தில் விஜய், மிடுக்கான போலீஸ் ஆபிஸராக , மலையாளி ஜோஸப் குருவில்லாவாக , தர்மேஷ்வர் என மூன்று வித கெட்டப்புகளிலும், கேரக்டர்களிலும் வழக்கம் போலவே தன் பாணியில் வாழ்ந்திருந்தார்.

மீனாவின் மகள்

மீனாவின் மகள்

விஜய், சமந்தா, எமி ஜாக்‌ஷன்,பிரபு, ராதிகா மொட்ட ராஜேந்திரன் மற்றும் மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் அட்டாகாசமாக நடித்து இருப்பார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யின் உண்மையான மகள் திவ்யா ஷாசா நடித்திருப்பார்.

தளபதி மகன்

தளபதி மகன்

இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் தனத ட்விட்டர் பக்கத்தில் தெறிபடத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், மொட்ட ராஜேந்திரன், ஜோசப் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாசா ஆகியோர் இடம் பெற்றுள்னர். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து அடுத்த வாரமே சென்னையில் நடத்த இருந்த படப்பிடிப்பு தற்போது தள்ளிச் சென்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X