இந்தி, மலையாளத்தை தொடர்ந்து உருது பேசும் நடிகர் விஜய்... பீஸ்ட் படத்தில் காத்திருக்கும் ட்ரீட்!
சென்னை: நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் உருது பேசும் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவுமே கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

உருது மொழியில் பேசும் விஜய்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதன் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் பீஸ்ட படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் உருது மொழியில் சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

பீஸ்ட் வில்லன் நடிகர்
இதனை பீஸ்ட் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நபர்களில் ஒருவரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார். ஆன்லைன் செய்தி தளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, விஜய் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு காட்சியில் உருது..
அதன்படி விஜய் எப்போதும் அமைதியாக இருப்பார் என்றும், மெதுவான குரலில்தான் எப்போதும் பேசுவார் என்றும் கூறியுள்ளார். மேலும் பீஸ்ட் படத்தின் ஒரு காட்சியில் தானும் விஜய்யும் உருது மொழியில் பேசிக்கொள்வோம் என்றும் ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார்.

தெறியில் மலையாளம்
நடிகர் விஜய் துப்பாக்கி படத்தில் இந்தி மொழியில் பேசியிருப்பார். அதனை தொடர்ந்து தெறி படத்தில் மலையாள மொழியில் பேசியிருப்பார். தற்போது பீஸ்ட் படத்தில் உருது மொழியில் பேசுகிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் உருது மொழியில் பேசும் வசனம் பெரும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

தளபதி 66
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இயக்குநர் வம்சி, தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படம் நடிகர் விஜய்யின் 66வது படம் என்பதால் தளபதி 66 என குறிப்பிடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











