எவனாவது குழிப்பறிச்சா கோபம் வரும்… இவரு குழிப்பறிச்சா மரியாதை வருது… விவேக் பற்றி விஜய் பேசிய வீடியோ!
சென்னை : நடிகர் விவேக் குறித்து, ஒரு நிகழ்ச்சியில் தளபதி விஜய் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்த வீடியோவைபார்த்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் திரண்டு வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தீவிர சிகிச்சை
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழந்தார். இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அதிகாலை காலமானார்
இதையடுத்து அவரது இதயத்தின் செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளிவந்த நிலையில். இன்று அதிகாலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.

அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அவரது இல்லத்திற்கு திரண்டு வந்து அவரது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தனி மரியாதை வருது
இந்நிலையில், சமூகவலைத்தள பக்கத்தில் தளபதி விஜய், விவேக் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில், குழிப்பறிக்கிற வேலைய எவனாவது செய்த அவன் மேல கோபம்தானே வரும், ஆனால் இவரு குழிப்பறிக்கும்போது மட்டும் அவர் மேல தனி மரியாதையே வருது. மரக்கன்று நடுறாருல அதைத்தான் நான் சொல்றேன். அது ரொம்ப பெரிய விஷயம், ஒரு நடிகனா சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறாரு, இன்னும் ஒருபடி மேல போய் செயல்லையும் இறக்கிட்டாரு , செயல்படவும் வைச்சிட்டாரு சூப்பர் சார் என்று விஜய் பேசிய அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











