twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு லட்ச ரூபாய் அபராதம், விமர்சனத்தை நீக்க பல லட்சம் செலவு செய்த விஜய்.. தீர்ப்பின் முக்கிய தகவல்கள்

    |

    சென்னை: நடிகர் விஜய் குறித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

    தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் சார்பாக செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

    தன் மீது சுமத்தப்பட்ட எதிர்மறை கருத்துக்களை சட்டத்தின் துணையோடு போராடி வென்றுள்ளார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்த லெவலுக்கு நகரும் தளபதி படம்... இந்தியில் டப்பாகும் மெர்சல் அடுத்த லெவலுக்கு நகரும் தளபதி படம்... இந்தியில் டப்பாகும் மெர்சல்

    காருக்கு வரி செலுத்தியாச்சு

    காருக்கு வரி செலுத்தியாச்சு

    நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு உரிய நுழைவு வரி செலுத்தவில்லை என்கிற வழக்கில் நடிகர் விஜய் மீது எதிர்மறை கருத்துக்களை நீதிபதி அடுக்கி இருந்தார். இந்நிலையில், காருக்கான நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ரூபாய் ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம் என விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    தேவையற்ற கருத்து

    தேவையற்ற கருத்து

    நடிகர் என வழக்கு ஆவணத்தில் குறிப்பிடவில்லை என்பதை பெரிய குற்றமாக நீதிபதி சுப்பிரமணியம் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள் என விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்திருந்தார்.

    குற்றவாளி போல

    குற்றவாளி போல

    லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரான ரோல் ராய்ஸ் காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது. குற்றவாளி போல காட்டியுள்ளது என நடிகர் விஜய் குறிப்பிட்டு இருந்தார். அந்த கலங்கத்தை போக்கவே இந்த மேல்முறையீட்டு வழக்கை நடிகர் விஜய் தொடர்ந்தார்.

    விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நீக்கம்

    விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நீக்கம்

    இந்நிலையில், தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் சார்பாக போடப்பட்டிருந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு நடிகர் விஜய்க்கு எதிரான எதிர்மறை கருத்துக்களையும் நடிகர் விஜய் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்கிற உத்தரவையும் நீக்க உத்தரவிட்டுள்ளது.

    பல லட்சம் செலவு

    பல லட்சம் செலவு

    ரூ. 1 லட்சம் அபராதத் தொகையை நீக்க நடிகர் விஜய் மேல்முறையீட்டு வழக்கு மூலம் பல லட்சங்களை செலவு செய்து தனது பக்கம் இருக்கும் நீதியை நிலைநாட்டி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் விஜய் நாராயணனுக்கு ஒரு சிட்டிங்கிற்கு பல லட்சங்கள் சம்பளம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது பணத்தை பற்றியது இல்லை என்றும் தன்மானத்தை பற்றியது என்பதால் தான் விஜய் இந்த விவகாரத்தில் முழு மூச்சாக இறங்கி தன் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை நீக்கி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

    English summary
    Actor Vijay spend several lakhs to solve the 1 lakh rupees fine case against him buzz circulates in cinema circle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X