கடவுள் நம்பிக்கை இருக்கு… எல்லா கோவிலுக்கும் போவேன்… என்னை அப்படித்தான் வளர்த்தார்கள் !
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பீஸ்ட் படத்தில் விஜய், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய் சன் டிவியில் நேர்காணலில் பேசி இருந்தார். அதில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருந்தார்.

விஜய்யுடன் நேருக்கு நேர்
இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தொகுப்பாளராக களமிறங்கி பல கேள்விகளை கேட்டிருந்தார். இதில், நீங்கள் ஜார்ஜியாவில் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்றீர்கள் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா என்று கேள்வி கேட்டார்.

கடவுள் நம்பிக்கை இருக்கு
அதற்கு பதிலளித்த விஜய், ஆமாம்.. கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு. சர்ச் போனால் ஒரு நல்ல ஃபீல் கிடைக்கும். சர்ச் மட்டும் இல்லை பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில், திருநள்ளாறு கோயில் போயிருக்கிறேன். அதே ஃபீல் அங்கும் கிடைக்கும். கத்தி பட சூட்டிகின் போது , கடப்பா மாவட்டத்தில் அமீன் தர்கா சென்று இருக்கிறேன் என்றார்.

பெற்றோர் அப்படி வளர்க்கவில்லை
அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அங்கே போனால் இங்கு வரக்கூடாது, இங்கே போனால் அங்கு வரக்கூடாது என்று என் பெற்றோர் என்னை வளர்க்கவில்லை . அதையே தான் என் குழந்தைகளுக்கும் நான் சொல்லிகொடுத்து இருக்கிறேன். சென்னையில் சர்ச் போக முடியாது. ஜார்ஜியாவில் நாம் தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகில் சர்ச் இருந்தது அதனால் போனேன் என்றார்.

மனம் திறந்த விஜய்
இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில், உங்களுக்கு கோபமே வராதா? என்ற கேள்விக்கு யார் சொன்னா வருமே இப்படியே கேட்டுக்கிட்டே இருந்தா நிச்சயம் கோவம் வரும் என்று கலகலப்பாக மனம் திறந்து பல விஷயங்களை பேசினார் விஜய். தளபதி விஜய்யின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியாகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











