அடடா வேற மாதிரி இருக்காரே.. காஷ்மீரிலிருந்து திரும்பிய விஜய்

சென்னை: நடிகர் விஜய் காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பியதை அடுத்து விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

வாரிசு படத்தின் கலவையான விமர்சனத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். மாஸ்டர் படத்துக்கு பிறகு இந்தக் கூட்டணி இணைந்திருக்கிறது. மாஸ்டர் படத்தில் எப்படி அதுவரை பார்க்காத விஜய்யை பார்த்தோமோ அதேபோல் லோகேஷுன் இணைந்திருக்கும் இந்தப் படத்திலும் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர்.

லியோ ப்ளடி ஸ்வீட் ப்ரோமோ

லியோ ப்ளடி ஸ்வீட் ப்ரோமோ

படத்துக்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. பல பெயர்கள் யூகிக்கப்பட்ட சூழலில் லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனை அதிகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகியும் பட்டையை கிளப்பியது. ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன.

எல்சியூவில் லியோ

எல்சியூவில் லியோ

விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியிருந்தார். அதில் கைதி பத்தில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரங்களை இணைத்து ஒரு மேஜிக் செய்திருந்தது போல் லியோ படத்திலும் அவ்வாறு செய்வார் என கருதப்படுகிறது. மேலும், இயக்குநர் ரத்னகுமார் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியுடன் வெளியிட்டிருந்த புகைப்படம் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது. இருப்பினும், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை எப்படி சர்ப்ரைஸாக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினாரோ அதுபோல் லியோவிலும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கலாம் என தெரிகிறது.

காஷ்மீரில் விறுவிறுப்பாக ஷூட்டிங்

காஷ்மீரில் விறுவிறுப்பாக ஷூட்டிங்

லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடந்துவருகிறது. இதற்காக படக்குழு சில வாரங்களுக்கு முன்னதாக தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றது. அங்கு நடந்த ஷூட்டிங்கில் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மிஷ்கினுடைய போர்ஷன் சில நாள்களுக்கு முன்பு முடிந்தது. அதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பிய விஜய்

காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பிய விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய் காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. தொடர்ந்து லியோ ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்த விஜய் சின்ன ரெஸ்ட் எடுப்பதற்காக சென்னை திரும்பியிருக்கிறாரா இல்லை காஷ்மீரில் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X